Random Posts

Header Ads

நுண்ணுயிர் உரங்களை உபயோகிக்கும் போது கவனிக்கப்பட வேண்டிய தொழில்நுட்பம் குறித்த தகவல்!!



நுண்ணுயிர் உரங்களை உபயோகிக்கும் போது கவனிக்கப்பட வேண்டிய தொழில்நுட்பம் குறித்த தகவல்!!


உயிர் உரம் என்பது இயற்கை உரத்தின் ஓர் அங்கமாகும். பாக்டீரியாக்களையும், பூஞ்சானங்களையும் கொண்டு தயாரிக்கப்படும் இவ்வுரம் மண்வளத்தை மேம்படுத்தி அதன் மூலம் பயிர் விளைச்சலை அதிகரித்து, நல்ல தரமான வேளாண் பொருட்கள் கிடைக்க உதவுகிறது. 


பல்வேறு வகையான உயிர் உரங்கள் பயிர்களுக்கேற்றவாறு உபயோகப்படுத்தப்படுகிறது. ரைசோபியம், அசோலா, அசோஸ்பைரில்லம், அசட்டோபேக்டர் போன்ற உயிர் உரங்கள் தழைச்சத்து மேம்பாட்டிற்காகவும், பாஸ்போபாக்டீரியா மற்றும் வேர் பூசணம் மணிச்சத்து மேம்பாட்டிற்காகவும் பயன்படுகிறது. இவ்வுயிர் உரங்களை உபயோகித்து அதிக பயன்பெற



வெயில் படாத குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும். நுண்ணுயிர் உரங்களை அதன் பொட்டலங்களில் பரிந்துரை செய்துள்ள கடைசி தேதிக்குள் உபயோகப்படுத்த வேண்டும்.


அங்ககப் பொருட்கள் மற்றும் தொழு உரம் அதிகம் இருக்கும் நிலத்தில் நுண்ணுயிர் உரங்களின் செயல்பாடும் அதிகம் என்பதால் அதிகமாக தொழுஉரம் இடவேண்டும்.


விதை நேர்த்தி செய்யும் போது நுண்ணுயிர் உரங்களை இறுதியாக பயன்படுத்தவும். (அரிசி கஞ்சி அல்லது வெல்லக்கரைசல் உபயோகித்தால் நுண்ணுயிர் உரங்கள் விதையுடன் நன்கு ஒட்டிக் கொள்ளும்).




நுண்ணுயிர் உரங்கனை வெயிலுக்கு முன் அதிகாலை நேரத்தில் உபயோகிக்க வேண்டும் என திண்டுக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ம.ச.சந்திரமாலா தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள், பாரம்பரிய நெல் இரகங்களில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைகள் பயிற்சி!!


வேளாண் துறையின் திட்டங்கள் மற்றும் குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்து வேளாண் துணை இயக்குனர் ஆய்வு!!


விவாசாயிகளுக்கு 4% வட்டியில் 5 ஆண்டுகளுக்கு ரூ. 3 லட்சம் விவசாயக்கடன் பெறுவது எப்படி?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments