சணப்பையில் விதை உற்பத்தி செய்திட வேளாண்மை இணை இயக்குநர் தொழில்நுட்ப ஆலோசனைகள்!!
அரியலூர் மாவட்டத்தில் 1,10,000 எக்டரில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றிற்கு தேவையான தொழு உரம் மற்றும் இயற்கை உரங்கள் இடாததால் மண்ணின் அங்கக சத்து குறைந்து காணப்படுகிறது.
மண்ணின் வளத்தை அதிகரிக்க சணப்பை சாகுபடி செய்து, மடக்கி உழுவது மிகவும் அவசியமாகும். இதற்கு தேவையான சணப்பை விதைகள் உற்பத்தி செய்ய விதை உற்பத்தி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விதை தேவையை பூர்த்தி செய்யலாம்.
சணப்பை விதைப்பிற்கான தொழில்நுட்பங்கள்
நிலத்தேர்வு
முந்தைய பயிர் அதே ரகமாகவோ அல்லது பிற ரகமாகவோ இருக்கக்கூடாது. விதை சான்றளிப்புத் துறையின் செயல்முறைகளுக்கு ஏற்றபடி சான்றளிப்பு செய்யப்பட்டிருப்பின் அதே ரகத்தை பயிரிடலாம்.
பயிர் விலகு தூரம்
ஆதார விதையாக இருப்பின் 250 மீட்டரும், சான்று விதை பதிவாக இருப்பின் 100 மீட்டரும் இருக்க வேண்டும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 30×30 செ.மீ இடைவெளியில் பயிர் சாகுபடி செய்யலாம். ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ வரை விதைப்பு செய்யலாம்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் கலந்து விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் விதைக்கு 2 பாக்கெட் ரைசோபியம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
சணப்பு கடின வகை விதையானதால் சல்பியூரிக் அமிலத்தில் ஒரு கிலோ விதைக்கு 100 மி.லி. என்ற விகிதத்தில் கலந்து 10-20 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
உரமிடல்
ஏக்கருக்கு 4 கிலோ யூரியா, 35 கிலோ டிஏபி மற்றும் 14 கிலோ பொட்டாஷ் அடி உரமாக இட வேண்டும். விதைத்த 40 மற்றும் 60-வது நாளில் 10 கிராம் சல்பேட் ஆப் பொட்டாஷ் உரத்தை தெளிக்க வேண்டும் (1% கரைசல்) – பொதுவாக சணப்பு பயிருக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது.
பயிர் பாதுகாப்பு
காய் துளைப்பான் தாக்குதல் காணப்பட்டால் குளோர்பைரிபாஸ் 20% EC 30 மி.லிட்டரை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
அறுவடை
சணப்பு பொதுவாக 150-வது நாளில் அறுவடைக்கு வந்துவிடும். ஒரு ஏக்கருக்கு 160 முதல் 200 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு குவிண்டால் சணப்பு விதை ரூ.5000/- வரை விற்பனையாகின்றது. எனவே, ஒரு ஏக்கரில் சராசரியாக ரூ.8,000/- முதல் ரூ.10,000/- வரை வருமானம் கிடைக்கும்.
விதை சேமிப்பு
சணப்பு விதைகளை 8% ஈரப்பதத்தில் 700 காஜ் பாலிதீன் பைகளில் 15 மாதங்கள் வரை சேமித்து வைத்து விற்பனை செய்யலாம். மேற்கண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சணப்பை விதை உற்பத்தி செய்ய வேளாண்மை இணை இயக்குநர் இரா.பழனிசாமி கேட்டுக்கொள்கிறார்.
மேலும் படிக்க....
நுண்ணுயிர் உரங்களை உபயோகிக்கும் போது கவனிக்கப்பட வேண்டிய தொழில்நுட்பம் குறித்த தகவல்!!
உளுந்து பயிரில் தோன்றும் உலர் வேரழுகல் நோயினை கட்டுப்படுத்துவது எப்படி? முழு விபரம் உள்ளே!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...