இயற்கை விவசாயத்தில் உயிர் உயிர் வேலியின் முக்கியத்துவம் குறித்த தொகுப்பு!!
திருவள்ளூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு அங்ககச்சான்றளிப்பு பெற்றுள்ளனர். இவ்வாறு அங்ககச்சான்றளிப்பு பெற்ற இயற்கை பண்ணைகளில் உயிர்வேலி அமைப்பதன் முக்கியத்துவம் பற்றி திருவள்ளூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் நா.ஜீவராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
உயிர்வேலி என்பது விளைநிலத்தை காக்கும் பொருட்டு உயிருள்ள மரங்கள் மற்றும் தாவரங்களால் வேலி அமைப்பதாகும். இந்த உயிர்வேலியானது இயற்கை பண்ணைகளுக்கு அருகாமையில் உள்ள பிற பண்ணைகளில் தெளிக்கக்கூடிய பூச்சி மருந்துகள் மற்றும் இரசாயனங்கள் காற்றில் பரவி இயற்கை பண்ணைகளில் படிவதை தடுக்கவும்,
மண் அரிப்பை தடுக்கவும், பல உயிர்களுக்கு உணவு கிடைக்கும் உணவுத்தொழிற்சாலையாகவும் விறகுக்காகவும் பசுந்தாள் உரத்திற்காகவும் பயன்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் பயிர்களுக்கு கெடுதல் உண்டாக்கும் பூச்சிகளை உண்ணும் பல்லி, ஓணான், எட்டுக்கால் பூச்சி போன்றவை வாழும் இடமாக அமைந்து பூச்சி மேலாண்மையில் பெரும் பங்காற்றுவதோடு பல்லுயிர் பரவலுக்கு உறுதுணையாக அமைகிறது.
விவசாயிகள் அந்தந்த பகுதிக்கேற்ப கிளுவை முள், கள்ளிச்செடிகள், ஆமணக்கு போன்றவற்றை உயிர்வேலியாக பயன்படுத்தலாம். உயிர்வேலி அமைப்பதால் கம்பிவேலி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் செலவும் வெகுவாகக் குறையும்.
மேலும் படிக்க....
3 ஏக்கா் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியம் வேளாண்துறை அறிவிப்பு!!
சணப்பையில் விதை உற்பத்தி செய்திட வேளாண்மை இணை இயக்குநர் தொழில்நுட்ப ஆலோசனைகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...