Random Posts

Header Ads

மண் வளம் காக்க பல தானிய பயிர் சாகுபடி செய்வது எப்படி? முழு விபரம் உள்ளே!!



மண் வளம் காக்க பல தானிய பயிர் சாகுபடி செய்வது எப்படி? முழு விபரம் உள்ளே!!


பல தானிய பயிர் சாகுபடி என்பது ஒரே வயலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல விதமான பயிர்களின் விதைகளை விதைத்து அவை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் வளத்தை பெருக்குவதாகும். 


பொதுவாக தானியவகை பயிர்களில் 2 வகை, எண்ணெய் வித்து பயிர்களில் 2 வகை, பயறு வகை பயிர்களில் 2 வகை, பசுந்தாள் உரப் பயிர்களில் 1 (அ) 2 வகை என தலா 1 கிலோ வீதம் ஒரு ஏக்கருக்கு 7 கிலோ விதை போதுமானதாகும்.



கோடைக்காலத்தின் இறுதியில் பருவப்பயிருக்கு முந்தைய காலத்தில் கிடைக்கப்பெறும் இடைப்பட்ட காலத்தில் பசுந்தாள் உரப் பயிர்களோ, பல தானிய பயிர்களோ பயிரிட்டு அவற்றை மடக்கி உழுது அடுத்த பயிருக்கு உரமாக்குவது அங்கக வேளாண்மையின் மிகச்சிறந்ததொரு தொழில்நுட்பமாகும். 


காலங்காலமாக செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி பயன்பாட்டின் காரணமாக வளம் குன்றியுள்ள மண்ணின் வளத்தை மீட்டெடுக்கவும், இயற்கை விவசாயத்திற்கு அடித்தளமாகவும் விவசாயிகள் முதலில் மேற்கொள்ள வேண்டியது பல தானியப்பயிர் விதைப்பாகும்.


இம்முறையில் தானியவகை பயிர்களான சோளம், கம்பு, திணை, சாமை ஆகியவற்றையும், பயறு வகைப்பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை ஆகியவற்றையும், எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு, எள் ஆகியவற்றையும் பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப் பூண்டு, சணப்பை ஆகியவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒரே நிலத்தில் விதைக்க வேண்டும். 



இந்த விதைகளை குறிப்பிட்ட அளவு பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமில்லை. நிலத்தின் பரப்பு, கிடைக்கும் விதைகளைப் பொறுத்து விதைக்கலாம். விதைகள் வளர்ந்து 45-50 நாட்களில் பூக்கும் பருவத்தில் செடிகளை மடக்கி நன்கு உழவு செய்ய வேண்டும். 


இதன் மூலம் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் ஊட்டச்சத்து சமச்சீராக கிடைக்கிறது. பல ஆண்டுகளாக பயன்படுத்திய செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறைந்து, மண்ணின் கரிமச்சத்து அளவு அதிகரிக்கிறது.



பல தானிய பயிர்களை மடக்கி உழுத பிறகு இயற்கை உரங்களான சாணம், கோமியம், பஞ்சகாவ்யம், ஜீவாமிர்தம் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை துவங்கலாம் என நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சு.சித்திரைச்செல்வி தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


இயற்கை விவசாயத்தில் உயிர் உயிர் வேலியின் முக்கியத்துவம் குறித்த தொகுப்பு!!


விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு முறைகள் குறித்த விளக்கம் மற்றும் காளான் வளர்க்க ஏற்ற பண்ணைக் கழிவுகள்!!


3 ஏக்கா் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியம் வேளாண்துறை அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments