Random Posts

Header Ads

கூட்டுறவு வங்கிகளுக்கான கடன் வரம்பு உயர்த்தி ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!!



கூட்டுறவு வங்கிகளுக்கான கடன் வரம்பு உயர்த்தி ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!!


நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்களின் வரம்பை இருமடங்காக உயர்த்தி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி இனி முதல் நிலை (Tier-I) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 60 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வழங்க முடியும்.


இதேபோல், இரண்டாம் நிலை (Tier-II) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 1.4 கோடி ரூபாய் வரை வீட்டுக் கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



கடன் வரம்பு


இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- இம்மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கொள்கை கூட்ட அறிவிப்புகள் ஜூன் 8ஆம் தேதி வெளியானபோது, கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 


இதன் தொடர்ச்சியாக தற்போது நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பை உயர்த்துவதாக ரிசர்வ் வங்கிஅதிகாரப்பூர்வமாக உயர்த்தி அறிவித்துள்ளது.


ஏற்கனவே அறிவிப்பு


இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டில்தான் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்பட்டது. அண்மையில் வீடுகளின் விலை உயர்ந்து வருவதாலும், வாடிக்கையாளர்களின் தேவையைக் கருத்தில் கொண்டும், கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.



அபராதம் கிடையாது


நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வீட்டுக் கடன்களை முன்பாகவே செலுத்தி முடிப்பதற்கு கட்டணம் அல்லது அபராதம் வசூலிக்கக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக் கடனை அடைப்பதற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை கொடுக்கலாம். இவ்வாறு ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க....


இயற்கை விவசாயத்தில் உயிர் உயிர் வேலியின் முக்கியத்துவம் குறித்த தொகுப்பு!!


3 ஏக்கா் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியம் வேளாண்துறை அறிவிப்பு!!


காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக உரங்கள் தமிழக அரசு அரசாணை வெளியீடு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments