கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்கள்!!
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கான அனைத்து துறை சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி சாக்கோட்டை வட்டாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கராபுரம், அமராவதி புதூர், நாட்டுச்சேரி, செங்காத்தான்குடி, ஜெயங்கொண்டான் மற்றும் சிறுகபட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கிராம மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரவும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் அனைத்து இணை துறைகளும் இணைந்து தங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானிய விவரங்களை விரிவாக எடுத்துரைத்தார்கள்.
சிவகங்கை மாவட்டத்தின் வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) இரா.தனபாலன், சங்கராபுரம் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
வேளாண்மை துறையில் செயல்படுத்தி கொண்டிருக்கும் மத்திய மற்றும் மாநில திட்டங்கள் மானிய விபரங்கள் இத்திட்டத்தின் பயன்கள் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பை அதிகப்படுத்ததல் பற்றி விரிவாக கூறினார்.
பயிற்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் சாக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ந.சண்முக ஜெயந்தி வரவேற்றார். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயனடைவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விவசாயிகள் தொகுப்பாக தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் ஆகியவை பற்றி விரிவாக எடுத்து கூறினார்.
வேளாண் பொறியியல் துறையிலிருந்து கலந்து கொண்டு உரையாற்றிய உதவி பொறியாளர் சுப்பிரமணியன், தேர்வு செய்யப்பட்ட தொகுப்பு தரிசு நிலங்களிலுள்ள முள் மற்றும் புதர்களை அகற்றி ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என்றுரைத்தார்.
மேலும் சோலார் இணைப்பு பெற விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையை அணுகி 70% மானியம் பெற்று பயனடைய கேட்டுக்கொண்டார். வேளாண் இயந்திரங்கள் மற்றும் பண்ணைக்கருவிகள் குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் 100 சதவிதம் மானியத்தில் அமைத்து தரப்படுகின்றன என தனது துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
சங்கராபுரம் கிராமத்தில் நடத்தப்பட்ட அனைத்து துறை சிறப்பு முகாமின் பொறுப்பு அலுவலராக வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையிலிருந்து உதவி வேளாண்மை அலுவலர் காஷா முகைதீன் கலந்து கொண்டார்.
வேளாண் விளைபொருட்களை அறுவடை செய்தவுடன் விற்காமல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்தி அதிக விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்ய கேட்டுக்கொண்டார். மேலும் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து அதிக இலாபம் ஈட்ட வழியுறுத்தினார்.
சாக்கோட்டை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சங்கராபுரம் அமராவதி புதூர் நாட்டுச்சேரி செங்காத்தான்குடி ஜெயங்கொண்டான் மற்றும் சிறுகபட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற இந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கான அனைத்து துறை சிறப்பு முகாமில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் கை தெளிப்பான்கள், இயந்திர தெளிப்பான்கள் மற்றும் வரப்பு பயிருக்கான உளுந்து விதைகள் வழங்கப்பட்டது. கால்நடை துறை உதவி மருத்துவர்கள் மூலம் கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
ஆடு மாடுகளுக்கு குடல் புழு நீக்கம் செய்ய மருத்துவம் செய்யப்பட்டு தாது உப்புக்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும் தோட்டக்கலை துறையின் மூலம் காய்கறிவிதைகள் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க....
கூட்டுறவு வங்கிகளுக்கான கடன் வரம்பு உயர்த்தி ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!!
இயற்கை விவசாயத்தில் உயிர் உயிர் வேலியின் முக்கியத்துவம் குறித்த தொகுப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...