நெல் சாகுபடியில் அதிகளவில் சன்ன இரகங்களைச் சாகுபடி செய்திட ஆலோசனை!!
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நெல் சாகுபடியில் அதிகளவில் சன்ன இரகங்களைச் சாகுபடி செய்திடுமாறு வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது குறுவைச் சாகுபடி ஏறத்தாழ 3,700 எக்டர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் குறுவைச் சாகுபடி செய்து வருகின்றனர்.
எனவே, குறுவைச் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் சன்ன இரகங்களை அதிகளவில் சாகுபடி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. தற்போது கோ-51, ஏடிடி -45 மற்றும் ஏ.டி.டி.-43 ஆகிய சன்ன இரகங்கள் குறுவைச் சாகுபடிக்கு உகந்தவையாகும்.
இதனால் நெல் சந்தைப்படுத்துதல் எளிதாக இருக்கும். எனவே, தாங்கள் சாகுபடி செய்யும்போது மோட்டா இரகங்களை காட்டிலும் சன்ன இரகங்களை அதிகளவில் சாகுபடி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் சீர்மிகு நெல் சாகுபடி முறையினைப் பின்பற்றி 25 செ.மீ. × 25 செ.மீ. இடைவெளியில் ஒற்றை நாற்றுகள் நடவு செய்வதனால், செலவு குறைந்து கூடுதல் மகசூல் பெறலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், எதிர்வரும் சம்பா பருவத்திலும் இதே போன்று கடைப்பிடிக்க இப்போதே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆடுதுறை-39, டிகேஎம்-13, என்எல்ஆர்-34449 சம்பா மசூரி ஆகிய சன்ன நெல் இரகங்களைத் தேர்வு செய்து சம்பா நெல் சாகுபடி செய்திட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. சிஆர்-1009 சப்-1 போன்ற மோட்டா இரகங்களை குறைந்த அளவில் சாகுபடி செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறுவைப் பருவத்தில் நன்செய் நிலங்களைத் தவிர பிற பகுதிகளில் நீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தி உளுந்து, மக்காச்சோளம், நிலக்கடலை ஆகிய மாற்றுப் பயிர்கள் சாகுபடி செய்வதனால் மண்வளம் மேம்படும்.
நீர்ப்பாசனத் தேவை குறையும். ஆகவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடி செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு நெல் சாகுபடியில் அதிக அளவில் சன்ன இரகங்களைச் சாகுபடி செய்திடுமாறும் நீர்த் தேவையைக் குறைக்க மாற்றுப் பயிர் சாகுபடி செய்யுமாறும் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்கள்!!
கூட்டுறவு வங்கிகளுக்கான கடன் வரம்பு உயர்த்தி ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!!
இயற்கை விவசாயத்தில் உயிர் உயிர் வேலியின் முக்கியத்துவம் குறித்த தொகுப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...