Random Posts

Header Ads

மண் வளம் காக்க மண்பரிசோதனை அடிப்படையில் பரிந்துரைக்கபட்ட அறிவிப்புகள்!!



மண் வளம் காக்க மண்பரிசோதனை அடிப்படையில் பரிந்துரைக்கபட்ட அறிவிப்புகள்!!


இயற்கை நமக்களித்த இணையற்ற வளங்களில் முக்கியமான மண்வளத்தை பொறுத்தே மனித சமுதாயத்தின் வாழ்வும், மறைவும் அமைந்துள்ளது. பூமியில் 15 முதல் 18 அங்குல ஆழம் வரையிலான மேல்புற மண் தான் செழிப்புக்கும், தாவரங்களின் உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக உள்ளது. 


கடந்த 40 முதல் 50 ஆண்டுகளில் 52 சதவிகித சத்தான மேற்புற மண்ணை நாம் இழந்துவிட்ட நிலையில் இனிமேலாவது மண் வளத்தை காத்திட முயற்சி எடுப்போம்.



இப்போது உள்ள மக்கள் தொகையின் உதவியுடன் ஒரு அங்குல ஆழமுள்ள வளமான மண்ணை உருவாக்கிட 13 ஆயிரம் ஆண்டுகள் தேவைபடுகிறது என ஆய்வாளர்களால் தெரிவிக்கப்படுகிறது. 


இதிலிருந்து நாம் அறிவது எவ்வளவு கஷ்டமான செயல் என்று எப்போதாவது மண்ணை பற்றி சிந்தித்து இருக்கிறேமா? இல்லை நமக்கு அதிக மகசூல் பெற வேண்டிய கண்ட கண்ட உரத்தை, பூச்சி மருந்தை தெளித்து இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 


இவ்வாறாக நீடித்தால் 2045ம் ஆண்டுகுள் உணவு உற்பத்தி 40 சதவிகிதமாக குறைந்த விடும் என, ஐ.நா.சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.



நாம் செய்ய வேண்டிது என்ன?


கோடை உழவு, ஆழச்சால் அகலபாத்தி அமைத்து நிலத்தை பாதுகாக்க வேண்டும். (ஏழு உழவு போட்டால் எரு போட வேண்டியதில்லை என்பது பழ மொழி). பயிற்சுழற்சி இந்த ஆண்டு ஒரு வித்திலை தாவரங்கள் சாகுபடி என்றால் அடுத்த பருவத்தில் இரு வித்திலை சாகுபடி பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும். 


மண்பரிசோதனை அடிப்படையில் பரிந்துரைக்கபட்ட உரங்களை இடுதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலத்தில் குள கரம்பை, வண்டல் மண் இடுதல், பசுந்தாள், தழை உரங்களை இடுதல், மண்ணின் கரிம சத்துகளை கூட்டிட பலதானிய பயிர் விதைப்பு செய்து 40 நாட்களில் மடக்கி உழுதல், 



வரப்பு ஒரங்களில் மரங்களை நட்டு அதன் இலை தழைகளை உரமாக்குதல், ஆட்டு கிடை, மாட்டு கிடை போன்றவைகளை வாய்ப்பான நேரங்களில் போடுதல் போன்ற பணிகளை செய்து மண்ணை வளமாக்கிட முயற்சி செய்வோம். வளமான மண்ணை வருங்கால சந்ததியினருக்கு விட்டு செல்வோம்.


தகவல் வெளியீடு 


அக்ரி சு.சந்திர சேகரன் வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை.


மேலும் படிக்க....


கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்கள்!!


கூட்டுறவு வங்கிகளுக்கான கடன் வரம்பு உயர்த்தி ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!!


நுண்ணுயிர் உரங்களை உபயோகிக்கும் போது கவனிக்கப்பட வேண்டிய தொழில்நுட்பம் குறித்த தகவல்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments