தென்னையில் சிவப்பு கூண் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்!!
சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தென்னையில் சிவப்பு கூண் வண்டு தாக்குதல் குறித்தான தொழில்நுட்ப கருத்துகள் பின்வருமாறு கூறினார்.
தாக்குதலின் அறிகுறிகள்
மரத்தில் ஓட்டைகளும் ஓட்டைகள் வழியே திசுக்களைத் தின்ற பின் வெளியே தள்ளப்பட்ட மர நாறுகளும் காணப்படும். புழுக்கள் உட்சென்ற சிறிய துவாரத்தின் வழியே சிவப்பு நீர் வடிந்து காய்ந்த பிசின் காணப்படும்.
வெள்ளைப்புழுவானது இளந்தண்டு பகுதியைத் துளைத்து உள்ளே சென்று இளந்தண்டின் சோற்றுப் பகுதியைத் தின்று வேகமாக வளர்கின்றது. ஆகவே தண்டின் சோற்றுப் பகுதி எங்கும் துவாரங்களாக காணப்படுகின்றன.
பலமற்ற இந்த நிலையில் மரத்தின் கொண்டைப் பகுதி எளிதாக முறிந்து விழுவது இயல்பு. மரத்தின் தண்டுப்பகுதியில் கூர்ந்து கவனித்தால் புழுக்களின் இரையும் சப்தம் கேட்கும்.
தாக்குதல் அதிகரிக்கும் நிலையில் மரத்தின் உட்புற ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன. அத்துடன் கொண்டைப் பகுதி முறிந்து விடுவதால் மரமானது பட்டு விடும்.
மேலாண்மை மற்றும் உழவியல் முறைகள்
அருகில் இருக்கும் மரங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வண்டு தாக்கிய மரங்களை வெட்டி அழிக்கவும். தண்டுப்பாகத்தில் உள்ள ஓலைகளை முழுவதும் வெட்டுவதால் வண்டுகள் முட்டையிட எளிதாகிறது.
இதைத்தடுக்க பச்சை ஓலைகளை வெட்டுவதைத் தவிர்க்கவும். தேவை ஏற்படின் தண்டிலிருந்து 120 செ.மீ விட்டுப் பின் ஓலைகளை நறுக்குவதால் புழுக்கள் எளிதில் துளைவிட்டு உட்செல்வதை தடுக்கலாம்.
இராசயன முறை
பாதிக்கப்பட்ட மரங்களில் இருக்கும் துளைகளை கவனித்து மேலே இருக்கும் துளையைத் தவிர பிறவற்றை அடைத்துவிட வேண்டும். பின்பு இத்துளை வழியே புனல் மூலம் 1% கார்போரைல் (20கி/லி) (அ) 0.2% டிரைகுளோர்பான் மரம் ஒன்றுக்கு 1 லி வீதம் ஊற்றி விட்டுத் துளையை அடைத்து விட வேண்டும். தேவைப்படின் 1 வாரம் கழித்து மீண்டும் ஒரு முறை செய்யவும்.
கொண்டைப்ப குதியில் தாக்குதல் இருப்பின் ஓலைகளைச் சுத்தம் செய்து பூச்சிக்கொல்லிக் கரைசலை ஊற்றவும். தண்டில் துளைகள் இருப்பின் அவற்றை தார் அல்லது சிமெண்ட் பூச்சு மூலம் அடைத்துவிட வேண்டும். ஆக்கர் கருவி மூலம் துளையிட்டு அத்துளையில் புனல் வைத்து மருந்தை ஊற்றலாம்.
மணலுடன் வேப்பங் கொட்டைப் பொடி 2:1 என்ற வீதத்தில் கலந்த கலவை அல்லது லின்டேன் 1.3 கிராம் மற்றும் மணல் கலந்து விரவி மட்டை இடுக்குகளில் 3 மாதத்திற்கு ஒரு முறை வைப்பதால் காண்டாமிருக வண்டு தாக்கிய இடங்களில் சிவப்பு கூண் வண்டு முட்டை இடுவதைத் தவிர்க்கலாம்.
இயந்தி முறை தென்னை ஓலைப்பொறி
கரும்புச்சாறு 2.5 கி.கி + ஈஸ்ட் மாத்திரை 5 கி + 5 மி.லி அசிடிக் அமிலம் (அல்லது அன்னாசி/கரும்புச் சாறுடன் ஊற வைத்தது)+நீளவாக்கில் வெட்டப்பட்ட ஓலை மட்டைத் துண்டுகள் போடப்பட்ட பானைகள் ஏக்கருக்கு 30 வீதம் தென்னந்தோப்பில் வைத்து கூண் வண்டுகளைக் கவரச் செய்து அழிக்கலாம்.
வாளியுடன் இனக்கவர்ச்சிப் பொறி சிவப்பு கூன்வண்டு பிடித்தல்
பிரமோன் பொறி
எக்டருக்கு ஒரு பொறி அமைக்கவும்
படி 1 : குறிப்பிட்ட சில வாளிகளில் 3-4 துளைகள் இட்டு அதனை தென்னைநார், சணல் நார்கள் கொண்டு, லேசாக அடைக்கவும். இதனால் வண்டுகள் வாளியுனுள் வர ஏதுவாகும்.
படி 2 : வாளியினுள்/பெர்ரோலியூர் 1 லிநீர் 100 கிஅன்னாசி (அ) கரும்புச்சாறு 2 கிஈஸ்ட்மற்றும் 2 கி கார்போரைல் போன்றவற்றை வைக்கவும்.
படி 3 : இந்த வாளியினை வண்டின் தாக்குதல் அதிகமுள்ள இடங்களில் வைக்கவும்.
படி 4 : வாரத்திற்கொருமுறை இந்த வாளி நீரை மாற்ற வேண்டும். இது கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் என்று எடுத்துரைத்தார்.
மேலும்
படிக்க....
மலிவான விலையில் யூரியா 500ml பாட்டிலின் விலை விவசாயிகளுக்கு ரூ.240 மட்டுமே!!
கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்! அதிகாரபூர்வ அறிவிப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...