நிலக்கடலை பயிரில் ஊட்டச் சத்துக்கள் அளித்தல் மற்றும் நூண்ணட்ட சத்துக்கள் இடுதலுக்கான தொழில்நுட்பம்!!
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் நிலக்கடலை பயிரில் ஊட்டச்சத்துக்கள் அளித்தல் மற்றும் நூண்ணட்டசத்து இடுவது குறித்து காளையார்கோவில், வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.என்.செந்தில்நாதன், விரிவான முறையில் தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
நுண்ணூட்ட சத்துக்கள் அளித்தல்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நுண் உரக்கலவையை எக்டருக்கு 12.05 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். (ஊட்டமேற்றிய தொழுவுரமாக தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண் உரக் கலவை மற்றும் தொழுவும் சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் நிழலில் உலர்த்தவும்.
விதையை உடனே அளிக்க வேண்டும். நுண் உரக் கலவையை மண்ணில் இட வேண்டும். நிலக்கடலையில் பூவை தக்க வைத்தல் நெற்று நிரப்புதல் மற்றும் வறட்சியை தாங்கும் தன்மையை அதிகரிக்க விதைத்த 35-ம் நாள் (50 சதவிகித பூக்கும் சமயத்தில்) இரண்டு தெளிப்பாக நிலக்கடலை ரிச் எக்டருக்கு 500 கிலோ (ஒவ்வொரு தெளிப்பிற்க்கும்) மற்றும் விதைத்த 45-ம் நாள் (காய் மற்றும் பருவம்) 500 லிட்டர் தண்ணீர் பரிந்துரைக்க்ப்படுகிறது.
ஜிப்சம் இடுதல்
ஒரு எக்டருக்கு 400 கிலோ வீதம் 40-45 வது நாளில் பாசன பயிருக்கும் 40-75 -வது நாளில் மானாவாரி பயிருக்கும் செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்து இட வேண்டும்.
மண்ணைக் கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். கால்சியம் மற்றும் கந்தகக் குறைபாடுகளை நிலங்களில் ஜிப்சம் இடுதல் நல்ல பலனை தரமும், ஜிப்சத்தின் மொத்த அளவில் பாதியை இரசாயன உரங்களுடன் அடியுரமாக இடுவதால் மானாவாரி மற்றும் இறவைப் பயிரில் நூற்புழுக்களால் ஏற்படும் காளஹஸ்தி மெலடி மற்றும் நிலக்கடலையில் உண்டாகும் சொறி போன்ற பாதிப்புகளை குறைக்க முடியும்.
ஊட்டச்சத்து கலவை தெளிப்பு
பெரிய பருப்புகள் கொண்ட இரகங்களில் காய்களின் பருப்பின் வளர்ச்சி குறைபாடு என்பது ஒரு பெரிய இடர்பாடு ஆகும். இதை தவிர்த்து நல்ல வளர்ச்சியடைந்த முழுமையான பருப்புகளை பெறுவதற்க்கு பல ஊட்டச்சத்துக்களை கலந்து தெளிக்க வேண்டும்.
இந்தக் கலவையை தயாரிக்க டி.ஏ.பி 2.5 கிலோ அம்மோனியம் சல்பேட் 1 கிலோ மற்றும் போராக்ஸ் (வெண்சுரம்) 0.5 கிலோவினை 37 லிட்டர் தண்ணீரில் ஒன்றாக கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறு நாள் காலை இந்த கலவையை வடிகட்டினால் 32 லிட்டர் வரை தெளிந்த ஊட்டச்சத்து நீர் கிடைக்கும்.
இதனை 468 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து 500 லிட்டர் அளவில் தயார் செய்ய வேண்டும். தேவைபட்டால் பிளானோபிக்ஸ் மருந்து 350 மில்லியை இதில் சேர்த்து விதைத்த 25ம் மற்றும் 35ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.
மேலும்
படிக்க....
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...