வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு 70% மானியமும் கூடுதல் மானியமாக 20% வழங்கப்படும்!!
விவசாயிகள் மானிய விலையில் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் முதல் தவணையாக 60 சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகள் ரூ.1.31 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்துக்கான கிணறுகள் நில நீா்ப் பாதுகாப்பான குறுவட்டப் பகுதிகளில் இருத்தல் வேண்டும். இதர பகுதிகளில் ஏற்கெனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்திவரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக இந்தத் திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்பு கோரி ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் முன்னுரிமையை துறக்கவேண்டிய அவசியமில்லை.
இந்தத் திட்டத்தின் கீழ் சூரிய சக்தி பம்ப்செட்டுகளை அமைக்க விரும்பும் விவசாயிகள், இலவச மின்இணைப்பு கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
இந்தத் திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகளை அமைத்திட வேளாண்மைப் பொறியியல் துறை உபகோட்டங்களில் விண்ணப்பம் அளிக்கும்போது சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகளை நுண்ணீா் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளிக்க வேண்டும்.
வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீா்நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள், கான்கிரீட் காரை இடப்படாத கால்வாய்களில் இருந்து 50 மீட்டருக்குள், நிலத்தடி நீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது.
இந்தத் தொலைவுக்குள் நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால் பொதுப்பணித் துறையிடம் இருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
இந்தத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினைச் சாா்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களை 0424 2904843, 04285 290069 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இணையதளம் மூலமாகவும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
18 மாவட்ட அனைத்து விவசாயிகளுக்கும் 50% மானியம் வழங்கப்படும் வேளாண்துறை அறிவிப்பு!!
குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி!!
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.8000 தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...