குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி!!
மதுக்கூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஆலத்தூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதியில் உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குருவை விவசாயிகளின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ரூபாய் 2466 க்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டி ஏ பி 25 கிலோ பொட்டாஸ் உரம் வழங்கும் நிகழ்ச்சி ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட குருவை சாகுபடி விவசாயிகளுக்கு உரங்களை வழங்கினார் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவு வங்கி தணிக்கை அலுவலர் பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு ஆலம் பள்ளம் விவசாயிக்கு உரம் வழங்கும் ஆணையை வழங்கினார்.
ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பாலசுப்ரமணியன் விவசாயிக்கு உரத்தை வழங்கினார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலர்கள் இளஞ்சியம் மற்றும் ஆத்மா திட்ட அலுவலர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலத்தூர் பஞ்சாயத்து மற்றும் புலவஞ்சி மற்றும் ஆலம்பள்ளம் தனிக்கோட்டை பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகள் குருவை சாகுபடி செய்து மேலுரம் இடும் நிலையில் உள்ள பயிர்கள் உள்ள விவசாயிகள் விடுபாடின்றி பதிவு செய்துஉரம் பெற்று பயன்பெற வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
நிலக்கடலையில் வேரழுகல் நோயை கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை!!
கத்தரியில் ஏற்படும் இலைப்புள்ளி நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பற்றிய முழு தொகுப்பு!!
இறந்த கோழிகளால் பறவை கரைசல் உரம் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி?
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...