Random Posts

Header Ads

ஒரு ஏக்கருக்கு ரூ. 80 ஆயிரம் மானியம்! 5 ஏக்கர் வரையில் ரூ.4 லட்சம் மானியம் பெறலாம்!!



ஒரு ஏக்கருக்கு ரூ. 80 ஆயிரம் மானியம்! 5 ஏக்கர் வரையில் ரூ.4 லட்சம் மானியம் பெறலாம்!!


நிரந்தர பந்தல் அமைக்க ரூ.4 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் விவசாயிகள் விண்ணப்பித்துப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


வேளாண்துறை அதிகாரிகள் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளனர். விவசாயிகளுக்கு நிரந்தர குடில் அமைக்க ஹெக்டேருக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும். எனவே தகுதியுள்ள விவசாயிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.



விவசாயிகள் தயக்கம்


திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் பந்தல் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. 


எனவே பீர்க்கன், பாகல், புடலை உள்ளிட்ட தோட்டக்கலைத்துறைப் பயிர்களுக்கு பந்தல் அமைப்பது அவசியமாகிறது. ஆனால் பந்தல் அமைப்பதற்கு செலவு அதிகம் பிடிப்பதால் விவசாயிகள் பந்தல் சாகுபடி மேற்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.



நிரந்தர பந்தல் அமைப்பதற்கு ரூ. 4 லட்சம்


இந்தநிலையில் கல்தூண்கள் அமைத்து நிரந்தர பந்தல் அமைப்பதற்கு ஒரு விவசாயிக்கு ரூ. 4 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கல் தூண்கள் அமைத்து நிரந்தர பந்தல் அமைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 80 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. 


அதன்படி ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 5 ஏக்கர் வரை பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைந்து நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இந்த பந்தலை பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ள முடியும் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இத்திட்டத்தின் கீழ், பரப்பளவு விரிவாக்கம், பாதுகாக்கப்பட்ட சூழலில் சாகுபடி, பழையயான மா தோட்டங்களை புதுப்பித்தல், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, இயந்திரமயமாக்கல், மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தல், பேக்கிங் அறை, குறைந்த விலையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், பண்ணை கொட்டகைகள் அமைத்தல் மற்றும் நடமாடும் காய்கறிகள் வழங்குதல் போன்றவற்றிற்கு நிரந்திரக் குடில் அமைக்கப்படுகிறது.



காய்கறிகள்


அவற்றில், திராட்சைப்பழம், பீக்கன், சோளம், பயறு, பீன்ஸ், போட்டா பீன்ஸ், கோவைக்காய் போன்ற காய்கறிகளையும், திராட்சை, டிராகன், கிவி போன்ற பழங்களையும் பயிரிடலாம்.


தேவையான ஆவணங்கள்


  • சிட்டா


  • அடங்கல்


  • நில வரைபடம்


  • ஆதார் அட்டையின் நகல்


  • குடும்ப அட்டையின் நகல்


  • 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம்


  • வங்கி கணக்கு புத்தகத்தின் நகல்



யாரை அணுகுவது?


இந்தத் திட்டத்தைப் பற்றிய விவரங்களைக் கீழே கேட்கலாம்.


  • விவசாய அலுவலகம்


  • பஞ்சாயத்து எழுத்தர்


  • வட்டார வளர்ச்சி அலுவலர்


இவர்களில் யாரேனும் ஒருவரிடமிருந்து விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.


செயல்முறை


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வேளாண்மைத் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பத்தை வாங்கி அனுப்புகின்றனர். பின்னர் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு விண்ணப்பங்கள் முறையாக அனுப்பப்படும்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


இந்த விண்ணப்பங்களுடன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் கொண்ட குழுக்கள் விவசாயிகள் உள்ள இடத்திற்கு வந்து நிரந்தர பந்தலை பார்வையிடுவர்.


அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் நம்பகத்தன்மை இருந்தால், பின்தங்கிய மானியமாக ரூ. 4 லட்சம் வழங்கப்படும்.



மேலும் படிக்க....


PM-kisan தயாராகிறது புதிய பட்டியல் இவர்களுக்கு ஒரு பைசா கூட கிடையாது!!


விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.8000 தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!!


தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றினால் ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைத்துத் தரப்படும்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments