Random Posts

Header Ads

தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றினால் ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைத்துத் தரப்படும்!!



தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றினால் ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு  அமைத்துத் தரப்படும்!!


கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற மாபெரும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த மே 23ந் தேதி அன்று தொடக்கி வைக்கப்பட்டது. 


தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கிராமங்களில் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவை அடைந்திட வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் உழவர் நலன் சார்ந்த பிற துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 



கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடவும், வேளாண்மையில் மகசூல் பெருக்கம் அடைந்திடவும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படுத்தும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படுகிறது.


முதலமைச்சரின் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, தொகுப்பு தரிசு நிலங்களில் நீர் ஆதாரம் உருவாக்கப்பட்டு சாகுபடிக்கு உகந்த நிலங்களாக மாற்றப்படுகிறது. 



மேலும் தொகுப்பு தரிசு நிலங்களில் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்தி, மண் மற்றும் நீரின் தன்மைக்கேற்ற குறைந்த நீர் தேவையுடைய பலன் தரக்கூடிய பயிர்கள் சாகுபடி செய்திட திட்டத்தில் வழிவகை உள்ளது.


நடப்பு ஆண்டில் இத்திட்டம் 3,204 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக, தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நிலத் தொகுப்பினை ஏற்படுத்தி குழுவாக சாகுபடிக்கு கொண்டு வருவதற்கு கைபேசியில் உழவன் செயலியில் தாங்களாகவே பதிவு செய்திட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


அவ்வாறு பதிவேற்றம் செய்த விபரங்களை துறை அலுவலர்கள் தொகுப்பு தரிசு நிலத்தினை நேரில் பார்வையிட்டு சரிபார்த்த பின்பு நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொண்டு ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைத்துக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பார்கள். 



ஆகவே, இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி தரிசு நிலமுடைய விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து பயனடைந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும் இத்துறையின் நலத்திட்டங்களில் பயனடைய விவசாயிகள் https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/scheme_register என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து இணைந்திடலாம். 


மேலும் கூடுதல் தகவலுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உரங்கள் மற்றும் 50% மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்பட்டது!!


கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு குவியும் சலுகைகள்!!


விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.25,000 மானியம் உடனே விண்ணப்பிக்க அழைப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments