20.93 கோடி கிலோ நெல் கொள்முதல் அதிகரிப்பு! கடந்தாண்டைவிட 100 சதவீதம் கூடுதல்!!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் 20.93 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு கொள்முதல் விலையில் 1 ரூபாய் அதிகப்படுத்தியதால், நேரடி நிலையங்களில் 100 சதவீதம் அளவுக்கு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், 3லட்சம் ஏக்கருக்கு மேல், விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். இரு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு, நுகர்பொருள் வாணிப கழகத்தினர், தனியார் நெல் வியாபாரிகளைவிட இரட்டிப்பு விலை வழங்கியதால், பெரும்பாலான விவசாயிகள், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் விற்பனை செய்கின்றனர்.
விற்பனை
அதன்படி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஆண்டு, 123 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
ஒரு கிலோ சன்ன ரக நெல்லுக்கு, 19.58 ரூபாய்; குண்டு ரக நெல்லுக்கு, 19.18 ரூபாய் வழங்கப்பட்டது. 40 கிலோ எடையுடைய ஒரு மூட்டை 783 ரூபாய்க்கு வாங்கப்பட்டது.இந்நிலையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்ற பின், சட்டசபை கூட்டத்தில், 'விவசாயிகளின் விளை பொருளுக்குரிய நெல் விலை உயர்த்தி வழங்கப்படும்' என அறிவித்தார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பல தரப்பு விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில், கூடுதல் நெல்லை விற்பனை செய்ய முன் வந்தனர்.அதற்கு ஏற்ப, காஞ்சிபுரம் மண்டல நுகர்பொருள் வாணிப கழகத்தினர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 88; செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 என, மொத்தம் இரு மாவட்டங்களிலும், 182 நெல் கொள்முதல் நிலையங்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கினர்.
அன்றில் இருந்து ஜூன் மாதம் இறுதி வரை என, எட்டு மாதங்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.நடப்பாண்டு, 1 ரூபாய் கூடுதலாக விலை வைத்து, கிலோ சன்ன ரகம் 20.60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. குண்டு ரக நெல் 19.68 ரூபாய்க்கு வாங்கப்பட்டது.
நடப்பாண்டு 40 கிலோ எடையுடைய நெல் மூட்டை 824 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளிடம் இருந்து, 20.93 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 10.08 கோடி கிலோ கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
ரூ.1 கூடுதல் விலை
நெல்லுக்கு ஏற்ற பணம், பல கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கி கணக்குக்கு வழங்கப்பட்டு உள்ளது.பெயர் வெளியிட விரும்பாத, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு, நெல் கொள்முதல் நிலையங்களில், 1 கிலோவிற்கு 1 ரூபாய் விலை கூடுதலாக வழங்கியதால், அனைத்து விவசாயிகளும், நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் விற்பனை செய்தனர். இதனால் நடப்பாண்டு, நெல் கொள்முதல் எடை அதிகரித்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
நெல் கொள்முதல் விபரம்
ஆண்டு நெல் எடை2020 - 21 10.85 கோடி கிலோ2021 - 22 20.93 கோடி கிலோ
கிடங்கு வசதி தேவை
செங்கல்பட்டு மாவட்டம், சிலாவட்டம் பகுதியில், பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் இருப்பு வைக்க கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த, கட்டவாக்கம் பகுதியில், பல ஆயிரம் மூட்டைகள் வைக்கும் அளவிற்கு, கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
எனினும், கூடுதலாக துவக்கப்பட்ட பரந்துார் பகுதியில், கிடங்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், சிலாவட்டம் பகுதியில், பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் இருப்பு வைக்க கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த, கட்டவாக்கம் பகுதியில், பல ஆயிரம் மூட்டைகள் வைக்கும் அளவிற்கு, கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. எனினும், கூடுதலாக துவக்கப்பட்ட பரந்துார் பகுதியில், கிடங்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க....
8 மாவட்டங்களில் கிணறு அமைக்க ரூ.3 லட்சம் மானியம்! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
வேளாண் துறை சார்பில் விவசாய தொகுப்பிற்கு இரண்டு 'போர்வெல்' அமைத்துக் கொடுக்கப்படும்!
பயிர் காப்பீடு செலுத்த அவகாசம் ஜூலையில் முடிவு உடனடியாக அடங்கல் வழங்க உத்தரவு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...