Random Posts

Header Ads

பயிர் காப்பீடு செலுத்த அவகாசம் ஜூலையில் முடிவு உடனடியாக அடங்கல் வழங்க உத்தரவு!!



பயிர் காப்பீடு செலுத்த அவகாசம் ஜூலையில் முடிவு உடனடியாக அடங்கல் வழங்க உத்தரவு!!

நடப்பாண்டு பயிர் காப்பீடு செலுத்த அவகாசம் வரும், ஜூலை மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், விவசாயிகளுக்கு, அவர்கள் கேட்கும் அடங்கல் உள்ளிட்ட சான்றுகளை, நான்கு தினங்களில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

பயிர் காப்பீடு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பின், வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், கூறுகையில், வருவாய்த்துறை செயல்பாடுகளை வேகப்படுத்தி, எளிமைப்படுத்த வேண்டும்.



கோவில் நிலங்களில் குடியிருப்போர், வீட்டு மனை பட்டா கோருவதால், அதை சட்டப்படி கையாளுவது குறித்து ஆலோசிக்கிறோம். இந்த ஆண்டுக்கான பயிர் காப்பீடு செலுத்துவதற்கான அவகாசம் வரும், ஜூலை மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், விவசாயிகளுக்கு, அவர்கள் கேட்கும் அடங்கல் உள்ளிட்ட சான்றுகளை, நான்கு தினங்களில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS 
ஊராட்சி மற்றும் வருவாய்த் துறை இணைந்து, தமிழகத்தில் முதல்கட்டமாக, 876 பஞ்சாயத்துகளில் நிர்வாக அலுவலகங்கள், கூட்ட அரங்கம், வி.ஏ.ஓ., அலுவலகங்கள் இணைந்த 'கிராம செயலகம்' கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களை தேர்வு செய்து, கட்டடம் கட்டப்படும் என அவர் தெரிவித்தார்.



மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உரங்கள் மற்றும் 50% மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்பட்டது!!


கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு குவியும் சலுகைகள்!!


விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.25,000 மானியம் உடனே விண்ணப்பிக்க அழைப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments