Random Posts

Header Ads

TNAU-ன் தீவனத் தேவையால் அதிகரிக்கும் மக்காச்சோளத்தின் விலை முன்னறிவிப்பு!!



TNAU-ன் தீவனத் தேவையால் அதிகரிக்கும் மக்காச்சோளத்தின் விலை முன்னறிவிப்பு!!


தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின்  விலைமுன்னறிவிப்பு திட்டமானது மக்காச்சோளத்திற்கான விலை முன்னறிவிப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் 2020-21-ஆம் ஆண்டில் 0.4 மில்லியன் எக்டர் பரப்பளவில் ; 2.56 மில்லியன் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், பெரம்பலூர், அரியலூர் சேலம், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல் மற்றும் விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மக்கச்சோளம் பயிரிடப்படுகிறது. 



வர்த்தக மூலங்களின் படி, தமிழ்நாட்டிற்கு மக்காச்சோள வரத்தானது ஆந்திரா பிரதேசம், கர்நாடகா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களிருந்து வருகிறது. இது தமிழ்நாட்டின் மொத்த மக்காசோளத் தேவையில் 30 சதவீதம் பூர்த்தி செய்கிறது. 


பீகாரில் இருந்து  மக்காச்சோள வரத்தானது ஏற்கனவே மார்ச்சில் தொடங்கியுள்ளது. இது ஜூலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டிற்கான, கர்நாடகா மக்காச்சோள வரத்தானது ஆகஸ்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இச்சூழ்நிலையில், விலை முன்னறிவுப்புத் திட்டமானது, கடந்த 27 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய  மக்காச்சோளத்தின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. 



ஆய்வுகளின் அடிப்படையில், நல்ல தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலையானது ஜூன் முதல் ஆகஸ்டு வரை குவிண்டாலுக்கு ரூ.2400 முதல் ரூ.2500 வரை இருக்கும் என கணித்துள்ளது. எனவே, விவசாயிகள் மேற்குறிய  சந்தை ஆலோசனை அடிப்படையில், விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றன


மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்


ஆ. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்- 641 003

தொலை பேசி – 0422 – 2431405


ஆ.இயக்குனர் மற்றும் முனை அதிகாரி

தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்- 641 003

தொலை பேசி – 0422 – 661 1278



மற்ற விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்


பேராசிரியர் மற்றும் தலைவர்

சிறுதானிய துறை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர்- 641 003

தொலை பேசி – 0422 – 2450507.


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உரங்கள் மற்றும் 50% மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்பட்டது!!


கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு குவியும் சலுகைகள்!!


விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.25,000 மானியம் உடனே விண்ணப்பிக்க அழைப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments