Random Posts

Header Ads

விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.25,000 மானியம் உடனே விண்ணப்பிக்க அழைப்பு!!



விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.25,000 மானியம் உடனே விண்ணப்பிக்க அழைப்பு!!


விவசாயிகள் தோட்டக்கலைத் துறை மூலம் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற முன்வருமாறு, விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.25,000 மானியமாக வழங்கப்படுகிறது.


நீர் சிக்கனம்


வேளாண் உற்பத்தியில் நிலம், நீர் மற்றும் இடுபொருட்களே அடிப்படைக் காரணிகளாக உள்ளன. இவற்றுள் பயிர் சாகுபடிக்கு கிடைக்கும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதுபோன்ற சூழலில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி செய்வது அவசியமாகும்.



நுண்ணீர் பாசனத் திட்டம்


சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்ற பாசன முறைகளைப் பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டம் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


ரூ.25,000 மானியம்


விருதுநகர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 2022-23 நிதியாண்டில் 1200 ஹெக்டர் பரப்பில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளை ஊக்குவிக்க துணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின்கீழ் பாதுகாப்பான குறு வட்டங்களில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறு அமைப்பதற்கு தலா ரூ.25,000 மானியம் வழங்கப்பட உள்ளது.


இது தவிர மின்மோட்டார் அமைப்பதற்க்கு ரூ.15,000மும், பாசன நீர் கொண்டு செல்லும் குழாய் அமைப்பதற்கு ரூ.10,000மும், நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்கு ரூ.40,000 என்ற அளவிலும் மானிய உதவி வழங்கப்படுகிறது.


முன்னுரிமை


மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு 80 சதவீத இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



இத்திட்டத்தில் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்கள் 


  • ஆதார் அட்டை நகல்


  • குடும்ப அட்டை நகல்


  • சிறு, குறு விவசாயி சான்று


  • கணினி சிட்டா


  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 


  • அடங்கல்


  • நிலத்தின் வரைபடம்


  • மண் மற்றும் நில பரிசோதனை ஆய்வு அறிக்கை 


ஆகிய ஆவணங்களுடன் விருதுநகர் மாவட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS 


தகவல் வெளியீடு


ஜெ.மேகநாதரெட்டி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.


மேலும் படிக்க....


PM Kisan 12வது தவணை வெளியிடப்படும் தேதி அறிவிப்பு! விவசாய அமைச்சகம் தகவல்!!


இயற்கை வேளாண்மையில் அமுதக்கரைசல் மற்றும் தேமோர் கரைசல் தயாரிப்பு செயல் விளக்கம்!!


ஜூலை மாதத்திற்குள் விண்ணப்பித்தால் ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500 கிடைக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments