மக்காச்சோளப் பயிரில் நுண்ணூட்ட மேலாண்மையின் மூலம் விளைச்சலை அதிகரிப்பதற்கான உத்திகள்!!
திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளமானது பெருவாரியாக பயிரிடப்பட்டு வருகிறது. மக்காச்சோளப் பயிரில் நுண்ணூட்ட மேலாண்மையின் மூலம் விளைச்சலை அதிகரிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட விதைப்பரிசோதனை நிலைய, விதைப்பரிசோதனை அலுவலர் இரா.இராமசாமி, வேளாண்மை அலுவலர்கள் ப.பிரபாகரன் மற்றும் ம.ஜமுனாராணி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது : திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளமானது மானாவரியாக ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்திலும், இறவைப் பயிராக தை மற்றும் சித்திரை பட்டத்திலும் பயிரிடப்படுகிறது. மக்காச்சோளமானது சிறுதானியங்களில் ஓர் முக்கியப் பயிராகும்.
இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இதனை உட்கொள்ளுவதன் மூலம் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் பல நன்மைகளைத் தருகிறது. மேலும் இது வளர்வதற்க்கு குறைந்த அளவு நீர் மற்றும் பிற மேலாண்மைகள் தேவைப்படுவதால் விவசாயிகளால் அதிகம் யிரிடப்படுகிறது.
இருப்பினும் நுண்ணூட்ட மேலாண்மையை சரிவரக் கையாளுவதன் மூலம் விளைச்சலை அதிகரிக்கலாம்.
நுண்ணூட்ட மேலாண்மை
12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 37.5 கிலோ மணலுடன் நன்கு கலந்து நேரடியாக நிலத்தில் இடலாம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உற்பத்தி செய்யப்படும் நுண்ணூட்டக் கலவையை (30கிலோ/ஹெ) தொழு உரத்துடன் 1:10 என்ற விகிதத்தில் கலந்து ஒருமாத காலத்திற்கு செறிவூட்டம் செய்து பின்பு நிலத்தில் இடலாம்.
துத்தநாகக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய 25 கிலோ துத்தநாகசல்பேட்டை நிலத்தில் இடலாம் அல்லது 0.5% துத்தநாக சல்பேட்டை இலைகளின் மீது தெளிக்கலாம்.
இரும்புச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய 1% பெர்ரிக் சல்பேட்டை விதைத்ததிலிருந்து 30, 40 மற்றும் 50 நாட்களி;ல் இலைகளின் மீது நேரடியாக தெளிக்கலாம். கந்தகச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய ஹெக்டேருக்கு 40 கிலோ கந்தகத்தை நிலத்தில் இடலாம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க....
இயற்கை வேளாண்மையில் அமுதக்கரைசல் மற்றும் தேமோர் கரைசல் தயாரிப்பு செயல் விளக்கம்!!
இடி, மின்னலினால் தென்னையில் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாப்பது எப்படி?
PM Kisan 12வது தவணை வெளியிடப்படும் தேதி அறிவிப்பு! விவசாய அமைச்சகம் தகவல்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...