Random Posts

Header Ads

PM Kisan 12வது தவணை வெளியிடப்படும் தேதி அறிவிப்பு! விவசாய அமைச்சகம் தகவல்!!



PM Kisan 12வது தவணை வெளியிடப்படும் தேதி அறிவிப்பு! விவசாய அமைச்சகம் தகவல்!!


பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 12வது தவணைத் தொகை எப்போது விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறித்த பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. 


பிரதமர் கிசான் சம்மன் யோஜனாவின் பயனாளிகளுக்கு EKYC ஐ அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் பலனைப் பெறும் விவசாயிகள் இப்போது ஜூலை 31 ஆம் தேதிக்குள் eKYCஐப் புதுப்பிக்க வேண்டும்.



தலா 6,000ரூபாய்


பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் நலிவடைந்த விவசாயிகளின் நிதிச்சுமையைப் போக்க ஏதுவாக, மத்திய அரசு, 6000 ரூபாய் வழங்குகிறது. இந்தத் தொகை 3 தவணைகளில் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது


இதில் முதல் தவணை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் முதல் மார்ச் வரையிலும் வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது விவசாயிகளின் கணக்கில் முதல் தவணை (11வது தவணை) மே 31ம் தேதி அனுப்பப்பட்டது.



12வது தவணை


தற்போது பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 12வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்த தவணைத்தொகை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


அதன்படி தற்போது வெளியான தகவலின் பேரில், 12வது தவணை தொகை செப்டம்பர் 1ம் தேதி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கணக்குகளுக்கு அரசு மூலம் செலுத்தப்படும் என விவசாய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS 


காலக்கெடு நீட்டிப்பு


மறுபுறம், அரசாங்கத்தால் இ-கேஒய்சி பெறுவதற்கான கடைசி தேதி ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 12வது தவணை எந்த இடையூறும் இல்லாமல் நீங்கள் பெற விரும்பினால், உங்கள் கேஒய்சி புதுப்பிக்கப்பட்டதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். 



இதற்குக் காரணம், பிரதம மந்திரி கிசான் யோஜனாக்கான கேஒய்சி அப்டேட் அவசியம். இ-கேஒய்சிக்கான கடைசி தேதியை அரசாங்கம் 31 ஜூலை 2022 வரை நீட்டித்துள்ளது. முன்னதாக, பிரதமரின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இகேஒய்சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை மே மாதம் 31ஆம் தேதி வரை மத்திய அரசு வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தகக்கது.


மேலும் படிக்க....


நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பற்றிய முழு விளக்கம்!!


100% மானியத்தில் வழங்கப்பட்ட குறுவை தொகுப்பில் புறக்கணிப்பு விவசாயிகள் குமுறல்!!


விவசாய மின் இணைப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! Online-ல் விண்ணப்பிப்பது எப்படி?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments