இடி, மின்னலினால் தென்னையில் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாப்பது எப்படி?
தென்னை மரம் ஒரு கடின மின்சாரக் கடத்தி என்றாலும் இடி, மின்னல் தாக்குவதால் பச்சை மரத்தில் மின்சாரம் பாய்ந்து மரம் எரிந்து கரிந்து போய்விடும். இதனால் இலைகள் மற்றும் காய்கள் உதிர்ந்து கொட்டி விடும்.
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர், வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி, தென்னை மரங்களை இடி, மின்னலில் இருந்து பாதுகாக்கும் முறைகள் பற்றி விளக்கமளித்தார். அவர் கூறியதாவது,
தென்னை மரத்தைத் தாக்கிய மின்னலினால் ஏற்படும் மின்சாரம் தூர் மற்றும் எல்லா வேர்களையும் பாதிப்பதால் மண்ணின் அடியில் வேர்களின் சேதம் மிக அதிகமாக காணப்படுகின்றது.
நேரடியாக மின்னல் தாக்கப்பட்ட மரத்தை பொறுத்தவரையிலும் மின்சாரமானது கொண்டையிலிருந்து தூர் வழியாக இறக்கி வேர்களின் வழியாக நாலாப்புறமும் மண்ணினுள் பரவுகின்றது.
அதே நேரத்தில் பக்கவாட்டிலுள்ள சுமார் 6 முதல் 8 மரங்களுடைய வேர்களும் மண்ணினுள் ஒன்றுடன் ஒன்று தொட்டு இணைந்து காணப்படுவதால் மின்சாரம் பாய்வதன் விளைவு அவற்றிற்கும் ஏற்படுகின்றது.
ஆகவே பக்கவாட்டில் நிற்கின்ற பல மரங்களும் பாதிக்கப்பட்டு சிறிது காலத்திற்கு பின்னர் மடிந்து விடுகின்றன. மேலும் தாக்கபட்ட தண்டு பகுதியினால் வேர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறது. அதன் மூலம் மகசூல் குறைந்து காணப்படும்.
பாதிக்கப்பட்ட மரங்களைப் பராமரித்தல்
குறைந்த அளவு மின் ஆபத்தால் பாதிக்கப்பட்ட மரங்களை முறைப்படி பராமரித்துக் காப்பாற்ற முடியும். இது பொன்ற மரங்களில் காணப்படும் வேர்ப்பகுதிகளின் வழியாக தீமை தரும் பாக்டீரியர் நுழைந்து நோயை உண்டு பண்ணலாம்.
ஆகவே வேர்பகுதிகளில் பொர்டொ பசையைப் பூசுவதால் நுண் கிருமிகள் மரங்களைத் தாக்காமல் தடுக்கலாம். பொர்டொ பசை தயாரிக்க இரு நூறு (200) கிராம் தாமிர சல்பெட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். பின்பு வேறு பாத்திரத்தில் 200 கிராம் சுண்ணாம்பு ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து கொள்ள வேண்டும்.
பின்பு மூன்றாவது பாத்திரத்தில் இவ்விரண்டு கரைசலையும் கலந்து பசை போன்று உபயோகித்து கொள்ளலாம். மரத்திலுள்ள சிற்றறை மற்றும் திசுக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் அதனை சரிகட்ட நுண்ணூட்ட சத்து கரைசலான தென்னை டானிக், ஒரு மரத்திற்கு 200 மில்லி வேர்களுக்கு ஊற்றுவதன் மூலம் மரம் உலர்ந்து போவதை ஓரளவிற்கு தடுக்கலாம்.
இத்துடன் பரிந்துரைக்கப்பட்ட உரங்களான யூரியா 1.3 கிலோ, பாஸ்பேட் 2.00 கிலோ, பொட்டாசியம் 2 கிலோ ஆகியவற்றின் பத்தில் ஒரு பகுதியை வேர்களுக்குக் கொடுத்து நீர் பாய்சுவதன் மூலம் சரி செய்ய முடியும்.
மேலும் படிக்க....
PM Kisan 12வது தவணை வெளியிடப்படும் தேதி அறிவிப்பு! விவசாய அமைச்சகம் தகவல்!!
ஜூலை மாதத்திற்குள் விண்ணப்பித்தால் ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500 கிடைக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
விவசாயிகளுக்கு 50% மானியத்தில் இடுபொருட்கள் வேளாண்துறை அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...