Random Posts

Header Ads

இயற்கை வேளாண்மையில் அமுதக்கரைசல் மற்றும் தேமோர் கரைசல் தயாரிப்பு செயல் விளக்கம்!!



இயற்கை வேளாண்மையில் அமுதக்கரைசல் மற்றும் தேமோர் கரைசல் தயாரிப்பு செயல் விளக்கம்!!


சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டாரம் விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உதவி இயக்குநர் அ.வளர்மதி, இயற்கை வேளாண்மையில் அமுதக்கரைசல் மற்றும் தேமோர் கரைசல் தயாரிப்பு குறித்த தொழில் நுட்பங்கள் பின்வருமாறு வழங்கினார்.


அமுதக்கரைசல்


இக்கரைசல் ஓர் உடனடி வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. இதற்கு ஒரு லிட்டர் மாட்டுச் சிறு நீர், ஒரு கிலோ கிராம் மாட்டுச் சாணம் மற்றும் 250 கிராம் பனைவெல்லம் அல்லது நாட்டு வெல்லம் தேவைப்படுகின்றது. 



10 லிட்டர் நீரில் மாட்டுச் சாணத்தையும், மாட்டுச் சிறுநீரையும் ஊற்றி, பொடி செய்த பனங்கருப்பட்டியை இட்டு கரைசலை கட்டியில்லாமல் தயார் செய்து 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். 


இக்சரைசலை ஒரு லிட்டருக்கு, 10 லிட்டர் என்றளவில் (1:10) நீர்த்தக் கரைசல் தயார் செய்து கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம். இந்தக் கரைசல் உடனடியாக தழை ஊட்டத்தை இலைவழியாக செடிகளுக்குக் கிடைக்கச் செய்வதோடு பூச்சிகளையும் விரட்டுகிறது.


தேமோர் கரைசல்


தேங்காய்ப் பால் மற்றும் மோர் கலந்த கலவைக்கு தேமோர் கரைசல் என்று பெயர். 5 லிட்டர் புளித்தமோர், 10 தேங்காய்களை துருவி அத்துடன் தேவையான நீர் சேர்த்து நன்கு ஆட்டி எடுத்த 5 லிட்டர் பால் மற்றும் தேங்காயினுள் இருக்கும் தண்ணீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். 



இவற்றை நன்கு கலந்து ஒரு மண்பானையில் 7 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். கலவை நன்கு நொதித்து புளித்து வரும். ஒரு லிட்டர் கலவையில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும். 


இதற்கு பயிர்களை வளர்க்கும் ஆற்றலும், பூச்சிகளை விரட்டும் குணமும், பயிர்கள் பூஞ்சாண நோயைத் தாங்கி வளரும் தன்மையும் கொடுக்கும். பயிர்களின் பூக்கும் திறனும் அதிகரிக்கின்றது.



மேலும் படிக்க....


இடி, மின்னலினால் தென்னையில் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாப்பது எப்படி?


PM Kisan 12வது தவணை வெளியிடப்படும் தேதி அறிவிப்பு! விவசாய அமைச்சகம் தகவல்!!


ஜூலை மாதத்திற்குள் விண்ணப்பித்தால் ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500 கிடைக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments