Random Posts

Header Ads

100% மானியத்தில் வழங்கப்பட்ட குறுவை தொகுப்பில் புறக்கணிப்பு விவசாயிகள் குமுறல்!!



100% மானியத்தில் வழங்கப்பட்ட குறுவை தொகுப்பில் புறக்கணிப்பு விவசாயிகள் குமுறல்!!


நாகப்பட்டினம் : காவிரி நீரை மட்டுமே நம்பி குறுவை சாகுபடி மேற்கொள்ளும் நாகை மாவட்ட விவசாயிகளை, குறுவை தொகுப்பு திட்டத்தில், தமிழக அரசு புறக்கணித்துள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.


வேளாண் உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், குறுவை தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.



திட்டத்தின் கீழ், 1 ஏக்கருக்கு யூரியா -45 கிலோ, டி.ஏ.பி.,- 50 கிலோ, பொட்டாஷ்- 25 கிலோ போன்ற இடுபொருட்கள், 100 சதவீத மானியத்தில் வழங்க, தமிழக அரசு 47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், நாகை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 


ஆனால் நாகை, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், தலை ஞாயிறு, வேதாரண்யம் ஒன்றியங்களை உள்ளடக்கிய நாகை மாவட்டத்திற்கு, 3,000 ஆயிரம் ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இது, காவிரி நீரை மட்டுமே நம்பி குறுவை சாகுபடியை மேற்கொண்டுள்ள, நாகை விவசாயிகள் மத்தியில் வேளாண் துறை அறிவிப்பு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் தமிழ்செல்வன் கூறியதாவது: 



குறுவை தொகுப்பை பெற விவசாயி, கம்ப்யூட்டர் சிட்டா எடுத்து, வி.ஏ.ஓ.,விடம் சான்றிதழ் பெற்று, வேளாண் விரிவாக்க அலுவலரிடம் சென்று பதிய வைக்க வேண்டும்.


ஒரு விவசாயி பல இடங்களுக்கும் அலைந்து ஒரு வழியாக பதிய வைத்தாலும், நடப்பாண்டு குறுவை தொகுப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. கடந்த ஆண்டு 10 ஆயிரத்து, 500 ஏக்கருக்கு வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு 3,000 ஏக்கருக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக வேளாண் துறையினர் கூறுகின்றனர்.



இது, தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும். குறுவை தொகுப்பு தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். முப்போகம் சாகுபடி நடைபெறும் மயிலாடுதுறைக்கு, 55 ஆயிரம் ஏக்கர் அறிவித்துள்ளனர்.


ஆனால், காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ள, நாகை மாவட்டத்தை வேளாண் அதிகாரிகள் உள்நோக்கததோடு புறக்கணிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் படிக்க....


விவசாய மின் இணைப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! Online-ல் விண்ணப்பிப்பது எப்படி?


ஆண்டுக்கு 10 டன் பழம் தரும் எலுமிச்சை சாகுபடி குறித்த தொழில்நுட்ப தகவல்கள்!!


விவசாயத்தில் தரமான இடுபொருட்களை உபயோகித்தால் அதிக மகசூல் பெறலாம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments