Random Posts

Header Ads

தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் சிறப்பு முகாம்களை நடத்த உத்தரவு!!



தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் சிறப்பு முகாம்களை நடத்த உத்தரவு!!


தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில், பொது மக்கள் எளிதில் கடன் பெற வசதியாக, ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு கடன் முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பயிர்க் கடன், தங்க நகை அடமானக் கடன், சிறு வணிகக் கடன், சுய உதவி குழு கடன் போன்ற பிரிவுகளில், கடன்களை வழங்குகின்றன. அவற்றில் வட்டி குறைவாக இருப்பதுடன், கடன் வழங்க அதிக கெடுபிடி காட்டப்படுவதில்லை.



குறிப்பாக, நகை கடன் வாங்கிய நிலையில், குறித்த காலத்திற்குள் வட்டி, அசல் செலுத்தவில்லை என்றாலும், உடனே ஏல நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. இதனால் பலரும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் கடன் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.இந்த விபரம் கிராமங்களில் வசிக்கும் பலருக்கு பலருக்கு தெரிவதில்லை.


இதையடுத்து, ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு கடன் முகாம்களை நடத்துமாறு, மண்ட இணை பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுஉள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 



கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், கடன் முகாம்களை நடத்துவதற்கு, 'நபார்டு' எனப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தலா ஒரு முகாமுக்கு, 6,000 ரூபாய் நிதி உதவி செய்கிறது.


எனவே, ஒவ்வொரு பகுதியிலும் கடன் முகாம்களை நடத்தி, கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கடன் வழங்குவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.



 மேலும் படிக்க....


100% மானியத்தில் வழங்கப்பட்ட குறுவை தொகுப்பில் புறக்கணிப்பு விவசாயிகள் குமுறல்!!


விவசாய மின் இணைப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! Online-ல் விண்ணப்பிப்பது எப்படி?


வேளாண்துறை வாயிலாக விவசாயிகளுக்கு 100% இலவசமாக மானியம் வழங்கப்படுகிறது!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments