Random Posts

Header Ads

நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பற்றிய முழு விளக்கம்!!



நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பற்றிய முழு விளக்கம்!!


கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் நிலக்கடலைப் பயிராகும் எல்லாப் பகுதிகளிலும் இந்நோய் அதிகளவில் தோன்றி மிகுந்தச் சேதத்தை விளைவிக்கிறது. நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம்.


நோய்க்காரணி


இந்நோய்த் தக்காளிப் புள்ளிச் சார்ந்த வாடல் நோய் நச்சுயிரியினால் தோற்றுவிக்கப்படுகிறது. இந்த நச்சுயிரியானது, கோள வடிவத்திலும் 70 – 90 மில்லி மைக்ரான் விட்டத்தைக் கொண்டும் காணப்படும்.



நோயின் அறிகுறிகள்


விதைத்த சுமார் 10 நாட்களில் இந்நோயின் அறிகுறிகள் தென்படும். விரிவடைந்த தளிர் இலைகளில் சிறிய, வெளிர்ப் பச்சை நிறத்தில் வளையப் புள்ளிகள் தோன்றும். சில நாட்களில் புள்ளிகள் விரிவடைந்து, கரிந்துப் போனப் புள்ளிகளாக மாறும். 


நோயின் அறிகுறியானது, செடியின் நுனியில் ஆரம்பித்து கீழ் நோக்கிப் பரவி, செடியின் நுனிப்பகுதி முழுவதும் கரிந்துவிடும். நாளடைவில் செடி முழுவதும் கரிந்து மடிந்து விடும்.


சில வேளைகளில் செடியின் ஒரு சில கிளைகளின் நுனிப்பகுதிகள் மாத்திரம் கரிந்து காணப்படும். தாக்கப்பட்ட செடிகளின் தண்டிலுள்ள, பக்க மொட்டுகளின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு அவைக் கிளைத்து இயல்பான உருவமில்லாத, சிறுத்த இலைகளைத் தோற்றுவித்து, செடிக்குப் புதர்ப் போன்றத் தோற்றத்தை அளிக்கும். நோய்த் தாக்கியச் செடிகளிலிருந்து பூக்களும், காய்களும் உண்டாவதில்லை.



இலைகளில் சிறிய வெளிர்ப் பச்சை நிறத்தில் வளையப் புள்ளிகள் தென்படல் நோய்ப் பரவும் விதமும், பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும் நிலக்கடலை வளையத் தேமல் நச்சுயிரி, ஒட்டுக் கட்டுவதன் மூலமும், சில பூச்சிகளின் (இலைப்பேன்கள்) மூலமும் பரவுகிறது.


இலைப்பேன்


நோய்க்கட்டுப்பாடு உழவியல் முறைகள்


நோய்த்தாக்கியச் செடிகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அழித்து விட வேண்டும்.


மருந்துச் சிகிச்சை


நோயைப் பரப்பக்கூடிய இலைப் பேன்களைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு மானோகுரோட்டோபஸ் –300 மில்லி அல்லது பாஸ்போமிடான் –100 மில்லி என்ற விகிதத்தில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும்.


கட்டுரை ஆசிரியர்கள் 


கு.விக்னேஷ், முனைவர் பட்டப்படிப்பு மாணவர் – தாவர நோயியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தொடர்பு எண்: 82488 33079,



மின்னஞ்சல் 


lakshmikumar5472@gmail.com, இரா. அருண்குமார், முனைவர், பட்டப்படிப்பு மாணவர் – வேளாண் விரிவாக்கத் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், தொடர்பு எண்: 73052 81993, மின்னஞ்சல் : arunkumarr698@gmail.com, 


முனைவர் த.சுதின் ராஜ், உதவிப் பேராசிரியர், தாவர நோயியல் துறை, தொடர்பு எண்: 94420 29913, மின்னஞ்சல் : suthinagri@gmail.com, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் – 608 002.

 

மேலும் படிக்க....


பயிர் காப்பீடு தொகை வழங்க தாமதம் ரூ. 91 ஆயிரத்து 420 இழப்பீடு வழங்க உத்தரவு!!


விவசாயத்திற்கு 16 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை!!


நெல் சாகுபடியில் அதிகளவில் சன்ன இரகங்களைச் சாகுபடி செய்திட ஆலோசனை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments