வேளாண் துறை சார்பில் விவசாய தொகுப்பிற்கு இரண்டு 'போர்வெல்' அமைத்துக் கொடுக்கப்படும்!!
அவிநாசி வட்டாரத்தில் நடப்பாண்டு, தரிசு நிலத்தை விளைநிலமாக்க, ஏழு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அரசின், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்தாண்டில், மாநிலம் முழுக்க உள்ள, 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளில் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவு பெறச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, அவிநாசி வட்டாரத்தில், நடப்பாண்டு, தெக்கலுார், கணியாம்பூண்டி, குப்பாண்டம்பாளையம், தத்தனுார், புஞ்சை தாமரைகுளம், போத்தம்பாளையம் என, ஏழு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிராமத்திலும், குறைந்தது 10 முதல், 15 விவசாயிகள் இணைந்து, 15 ஏக்கர் மானாவாரி நிலத்தை ஒரு தொகுப்பாக மாற்றி, பதிவு செய்ய வேண்டும். அங்கு, விவசாயம் செய்ய ஏதுவாக, வேளாண் துறை சார்பில் 'போர்வெல்' அமைத்துக் கொடுக்கப்படும். 30 விவசாயிகள் வரை இணைந்து தொகுப்பு அமைத்தால், இரண்டு 'போர்வெல்' அமைத்துக் கொடுக்கப்படும்.
மொத்தமாக, ஒரு மின் இணைப்பும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். அந்நிலத்தில், சொட்டுநீர் பாசனத்துடன் கூடிய பயிர் சாகுபடிக்கு பரிந்துரை செய்வதுடன், விதைகளும் மானிய விலையில் வழங்கப்படும்.
தென்னங்கன்று வினியோகம், வீட்டுத்தோட்டம் அமைக்க காய்கறி விதை தொகுப்பு வழங்குவது, பண்ணைக்குட்டை அமைப்பது, பழச்செடிகள் மற்றும் மரக்கன்று தொகுப்பு வினியோகம் செய்வது, என பல உதவிகள் வழங்கப்படும்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
“திட்டத்தில் இணைய விருப்பமுள்ள விவசாயிகள், அவிநாசி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். விபரங்களுக்கு, 98433 74567, 96779 54599 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என, அவிநாசி வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு தெரிவித்தார்.
மேலும் படிக்க....
பயிர் காப்பீடு செலுத்த அவகாசம் ஜூலையில் முடிவு உடனடியாக அடங்கல் வழங்க உத்தரவு!!
TNAU-ன் தீவனத் தேவையால் அதிகரிக்கும் மக்காச்சோளத்தின் விலை முன்னறிவிப்பு!!
சூரிய கூடார உலர்த்தி (Solar Drier) அமைப்பதற்கு தமிழக அரசு வழங்கும் மானியம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...