சூரிய கூடார உலர்த்தி (Solar Drier) அமைப்பதற்கு தமிழக அரசு வழங்கும் மானியம்!!
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்
அறுவடை செய்த விவசாய விளைப்பொருட்களை உலர்த்துவதற்கு உதவும் சூரிய கூடார உலர்த்தி (Solar Drier) அமைக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியம் வழங்குகிறது.
பொதுவாக வெளியே மண் தரையிலோ அல்லது ரோட்டிலோ விவசாய விளைபொருட்களை காய வைத்தால் தரைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியின் நிறம் மங்கியும், மேல் பகுதியிலுள்ள நிறம் வேறு மாதிரியாகவும் இருப்பதால், மொத்த பொருளின் தரம் குறைகிறது.
மேலும், காயவைக்கும் பொருளுடன் அவ்விடத்திலுள்ள கல், மண் மற்றும் தேவையற்ற பிறபொருட்கள் கலந்து மேலும் தரம் இழக்கிறது. எனவே, விவசாயிகள் சூரிய கூடார உலர்த்தியின் மூலம் விளைபொருட்களை உலர்த்தினால், விளைபொருட்களின் தரம் கூடுவதோடு மட்டுமல்லாமல் சந்தையில் அதன் மதிப்பும் கூடுகிறது.
இதில் காய வைப்பதன் மூலம் விளைபொருட்கள் இக்கூடாரத்தில் உள்ள அதிக வெப்பத்தின் காரணமாக, குறைந்த நேரத்தில் காய்ந்து விடுகிறது. மேலே கூடார அமைப்பு இருப்பதனால், காற்று மற்றும் மழை போன்ற இயற்கை அழிவுகளிலிருந்து பொருட்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்க உதவுகிறது. விளைபொருட்கள் தரமானதாக இருக்க பயன்படுகிறது.
400 சதுர அடி முதல் 1000 சதுரஅடி பரப்பளவில் இக்கூடாரத்தை அமைத்துக் கொள்ளலாம். 400 சதுர அடி உள்ள சூரிய உலர்த்தி கூடாரத்தை அமைக்க சுமார் 3.00 இலட்சம் ரூபாய் செலவாகிறது.
1000 சதுர அடி பரப்பளவில் இக்கூடாரத்தை அமைக்க சுமார் 7.00 இலட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதில் டிரே இல்லாமலும் அதிக செலவில்லாத பொருள்களைக் கொண்டு தரை தளத்தினை அமைத்து இக்கூடார அமைப்பின் செலவை குறைத்துக் கொள்ளலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் 2022-23ஆம் நிதியாண்டில் 6 சூரிய கூடார உலர்த்தி அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.17.05 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தினைப் பயன்படுத்தி இம்மாவட்ட விவசாயிகள் மானிய உதவியுடன் சூரிய கூடார உலர்த்தியை அமைத்துப் பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு
உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண்மை விரிவாக்க மையம், சிவில் சப்ளைஸ் கிடங்கு பின்புறம், அண்ணாமலை நகர், வசந்தபுரம் அஞ்சல்,
திருச்சி மெயின் ரோடு, நாமக்கல் – 600 002, உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, காவேரி கார்டன், பெட்ரோல் பங்க் பின்புறம், சேலம் மெயின் ரோடு, திருச்செங்கோடு.
மேலும் படிக்க....
கரும்பில் வறட்சி மேலாண்மை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் பற்றிய முழு தொகுப்பு!!
கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு குவியும் சலுகைகள்!!
விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.25,000 மானியம் உடனே விண்ணப்பிக்க அழைப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...