Random Posts

Header Ads

கரும்பில் வறட்சி மேலாண்மை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் பற்றிய முழு தொகுப்பு!!



கரும்பில் வறட்சி மேலாண்மை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் பற்றிய முழு தொகுப்பு!!


கரும்பு ஒரு நீண்ட காலப் பயிர் என்பதால், வறட்சி போன்ற இயற்கை காரணிகளால் பாதிக்கப்படலாம். கரும்பில் ஏற்படும் வறட்சி, கரும்பின் மகசூலில் 20-40மூ வரை இழப்பை ஏற்படுத்தும். 


மேலும் சுக்ரோஸின் அளவு 5% வரை குறையக்கூடும். கடுமையான வறட்சி ஏற்படும் போது பயிர் இழப்பு மற்றும் சுக்ரோஸின் அளவு முழுமையாக பாதிக்கப்படும். வறட்சியான சூழ்நிலை (Wolly aphid) அசுவினியின் தாக்குதலுக்கும் வழிவகுக்கும். 



இது பொதுவான பூச்சியாக இல்லாவிட்டாலும் 2000-2002ல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் வறட்சியின் போது கரும்பில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் வறட்சியின் விளைவாக தண்டு துளைப்பான், கரையான் மற்றும் பிங்க் மாவுப்பூச்சியின் தாக்குதலும், வாடல் மற்றும் கரிப்பூட்டை நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.


தண்ணீரினைச் சேமிக்க படிப்படியாக சால்களை அகலப்படுத்துதல், நடவு சமயத்தில் 30 செ.மீ. அகலத்தில் நீர்ப்பாசன வாய்க்கால் அமைத்து பின்னர் அதனை 45 செ.மீ. அளவிற்கு நடவு செய்த 45ம் நாள் முதல் மண் அணைக்கும்போது அகலப்படுத்தி மேலும் 90ம் நாள் மேற்கொள்ளும் ஆழப்படுத்துவதின் மூலம் 35 சதவிகிதத் தண்ணீரினைச் சேமிக்கலாம்.



வறட்சி நிர்வாகம்


வறட்சி தாங்கி வளரக்கூடிய ரகங்களை தேர்வு செய்தல். சமச்சீர் உர நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். அங்கக உரங்களை பயன்படுத்துவதன் மூலம் வறட்சியின் கடுமையான விளைவுகளில் இருந்து மண் ஈரத்தைப் பாதுகாக்கலாம்.


கரும்பிற்கு மண் அணைத்தல். கரும்பின் வரிசைகளுக்கிடையே களைக்கொத்தினால் கொத்தி விடுவதன் மூலம் மண்ணின் நுண்துளைகள் அடைக்கப்பட்டு மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது.


நடவு செய்த ஒரு வாரத்தில் காய்ந்த கரும்புத் தோகைகளை 10 செ.மீ உயரத்திற்கு பரப்புதன் மூலம் களைகட்டுப்படுத்தப்படுவதோடு வறட்சி காலங்களில் கரும்பு தாக்குப்பிடித்து வளர்வதற்கும், கரும்பின் நீர் தேவை குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது.



பூச்சி, நோய் பாதிப்பில்லாமல் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். கரும்பு விதைக்கரணைகளை 80 கிலோ நீர்த்த சுண்ணாம்புடன் 400 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையில் 1 மணி நேரம் ஊற வைத்தல்.


30 செ.மீ. ஆழமான நடவு சால்களில் கரணைகளை நடவு செய்தல். பொட்டாஸ்; மற்றும் யு+ரியா 2.5 சத சரைசலை வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்தல்.


6 சத கயோலின் (60 கிராம் கயோலின் 1 லிட்டர் தண்ணீருக்கு) தெளித்து நீர்த்தேவையினைக் குறைத்தல். தண்ணீர் தட்டுப்பாடான பகுதியில் மாறுசால் அல்லது விடுசால் பாசனம் நன்மைக்குறியதாகும்.


நடவு செய்த 120ம் நாள் கூடுதலாக 125 கி மியு+ரேட் ஆப் பொட்டாஸ்ஃ எக் என்ற அளவில் இட வேண்டும். காய்ந்த சோகைகளை 5வது மாதம் உரித்து கரும்பு வரிசைக்கு இடையே பரப்புதல்.



இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி, கரும்பு சாகுபடியின் தொழில்நுட்பங்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். 


மேலும் படிக்க....


கதிரி 1812 நிலக்கடலை ரகத்தின் சிறப்புகள் என்ன என்பதை பார்ப்போம்!!


இயற்கை வேளாண்மையில் அமுதக்கரைசல் மற்றும் தேமோர் கரைசல் தயாரிப்பு செயல் விளக்கம்!!


விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.25,000 மானியம் உடனே விண்ணப்பிக்க அழைப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments