இறந்த கோழிகளால் பறவை கரைசல் உரம் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி?
இறந்த கோழிகளை குழிதோண்டி புதைப்பதற்குப் பதில், அந்த கோழிகளை பயன்படுத்தி பறவை கரைசல் உரம் தயாரித்து சாதனை படைத்து வருகிறார் பாப்பம்பாடியை சேர்ந்த எம்.பி.ஏ., இளைஞர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடியை சேர்ந்தவர் ஹேமந்த்குமார், 24; எம்.பி.ஏ., பட்டதாரி.
இவர், இறந்த கோழிகளை பயன்படுத்தி, நாட்டிலேயே முதல் முறையாக, 'பறவை கரைசல் உரம்' தயாரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: பாப்பம்பாடியில் என் குடும்பத்தாருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் தினமும், 30 கோழிகள் இறக்கின்றன.
இதை, அதை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், குழி தோண்டி புதைக்க வேண்டும் அல்லது மிஷினில் எரிக்க வேண்டும் என்பது அரசு விதி. அதற்குப் பதில், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் ஆலோசனை படி, மாற்றி யோசித்தேன்.
இறந்த எட்டு கோழிகளை துண்டுகளாக வெட்டி, 20 லிட்டர் மண் பானையில் போட்டு, அதில், 500 மில்லி கரும்புச்சாறு, சாணிக்கரைசல் மற்றும் நீரை ஊற்றி சாக்குப்பையால் மூடுவேன்.
அந்த பானைகளை தரையில் வைத்து அதன் மீது, கோழி கழிவுகளை பரப்பி மூடி, மிதமான ஈரப்பதத்துடன் மூன்று மாதம் வைக்கிறேன். துண்டுகளாக வெட்டப்பட்ட இறந்த கோழிகள், பாக்டீரியா மூலம் கரைசலாக மாறுகிறது.
இதை விவசாயத்துக்கு உரமாக பயன்படுத்துகிறோம். இதை முதற்கட்டமாக, எங்கள் விவசாய நிலத்தில் நெல்லி, சப்போட்டா, கொய்யா, தென்னை மரங்களின் வேர் பகுதியை சுற்றி, 2 லிட்டர் வீதம், 6 மாதத்திற்கு ஒரு முறை ஊற்றினோம்.
இதனால், 30 சதவீத கூடுதல் விளைச்சல் கிடைத்தது. மேலும், பருத்தியை தாக்கும் பூச்சிகளை, 3 லிட்டர் கரைசலுக்கு, 20 லிட்டர் நீர் சேர்த்து, 'ஸ்ப்ரே' செய்தால், பூச்சிகள் இறக்கின்றன.சுற்று வட்டாரத்திலுள்ள விவசாயிகளுக்கும் உரமாக மாறிய இந்த பறவை கரைசலை கொடுக்க உள்ளோம்.
புதிய தொழில்நுட்பம் மூலம், புதிய இயற்கை உரம் தயாரிப்பது மகிழ்ச்சியை தருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க....
PM-kisan தயாராகிறது புதிய பட்டியல் இவர்களுக்கு ஒரு பைசா கூட கிடையாது!!
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.8000 தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!!
தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றினால் ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைத்துத் தரப்படும்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...