கத்தரியில் ஏற்படும் இலைப்புள்ளி நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பற்றிய முழு தொகுப்பு!!
இந்தியாவில் ஆண்டுக்குத் தோராயமாக 128.13 லட்சம் டன்கள் கத்தரி உற்பத்திச் செய்யப்படுகிறது. இந்தியாவில் கத்தரி அதிகம் பயிராகும் எல்லா மாநிலங்களிலும் இந்நோய்ப் பரவலாகக் காணப்பட்டாலும், சிலப் பருவங்களில் இது அதிகளவில் தோன்றி, மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் இந்நோய் மிக அதிகளவில் தோன்றுகிறது. கத்தரியில் இலைப்புள்ளி நோயும் அதன் மேலாண்மை முறைகள்பற்றியும் காண்போம்.
நோய்க்காரணி
இந்நோய் ஆல்டர்னேரியா மெலான்ஜினே என்ற என்ற ஒரு வகைப் பூசணத்தால் ஏற்படுகிறது. இதன் பூசண இழைகள் நன்கு கிளைத்தும், இளம் பழுப்பு நிறமாகவும், குறுக்குச் சுவர்களுடனும், திசுவறைகளின் ஊடேயும் காணப்படும்.
நோயின் அறிகுறிகள்
இந்நோயானது இலைகளைத் தாக்குவதோடு மட்டுமல்லாமல் காய்களையும் தாக்கக் கூடியது. முதிர்ந்த இலைகளில் முதலில் பரவலாக, மங்கிய பழுப்பு நிறத்தில், சிறிய வட்ட வடிவப் புள்ளிகள் தோன்றும்.
புள்ளிகள் ஒரே மையப் புள்ளியைக் கொண்ட, பல வளையங்களாக, குறிப்பலகையைப் போன்று தோன்றமளிக்கும். புள்ளிகள் நடுப்பகுதி கரியும் போது புள்ளி மேலும் மேலும் விரிவடையும்.
புள்ளிகள் ஒழுங்கற்ற வட்ட வடிவமாகவும் 4 – 8 மி.மீ விட்டத்தைக் கொண்டும் தென்படும். பல புள்ளிகள் ஒன்றாக இணைந்து, இலையின் பெரும் பகுதி தாக்கப்படும் போது, இலை மஞ்சள் நிறமாக மாறி, உதிர்ந்து விடும்.
இது போன்ற புள்ளிகள் காய்களிலும் தோன்றும். கைகளில் தோன்றும் புள்ளிகள் பெரியதாகவும் உட்குழிந்தும் தென்படும். ஒரே புள்ளியானது விரிவடைந்து, காயின் பெரும்பாகத்தைத் தாக்கக் கூடியது. தாக்கப்பட்ட காய்கள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்து விடும்.
இலை மற்றும் கைகளில் வட்ட வடிவப் புள்ளிகள் தென்படல், நோய்ப் பரவும் விதமும், பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்
கோனிடியா வித்துக்கள் முளைப்பதற்கு ஏற்ற வெப்பநிலை 28 – 300 செ.கி மற்றும் காற்றில் அதிக ஈரப்பதம் போன்றவையாகும். இது போன்ற சூழ்நிலையில் கோனிடியா வித்துக்கள், 35 – 45 நிமிடங்களில் முளைத்து ஊண் வழங்கியைத் தாக்கக் கூடியவை.
பூசண இழைகள் நோய்த் தாக்கி கரிந்துப் போன இலைகளில் ஒரு வருடத்துக்கு மேல் உயிருடன் இருக்கக் கூடியவை. கோனிடியா வித்துக்களும் பல மாதங்கள் வரையில் மண்ணில் முளைப்புத்திறன் மாறாமல் இருந்து அடுத்து வரும் பயிரில் புதிதாக நோயைத் தோற்றுவிக்கக் கூடியவை. இரண்டாம் பட்சமாக காற்று, மழை, பூச்சிகள் போன்றவற்றால் நோய் வேகமாகப் பரப்பப்படுகிறது.
நோய்க் கட்டுப்பாடு உழவியல் முறைகள்
நிலத்தில் கிடக்கும் நோய்த் தாக்கிய இலைகள் மற்றும் செடியின் பாகங்களை அப்புறப் படுத்தி எரித்து விட வேண்டும்.
விதை சிகிச்சை
ஒரு கிலோ விதைக்கு திரம் – 4 கிராம் அல்லது காப்டன் – 4 கிராம் வீதம் விதைப்பதற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்னரேக் கலந்து வைத்திருந்துப் பின்னர் விதைக்க வேண்டும்.
மருந்து சிகிச்சை
ஏக்கருக்கு தாமிர ஆக்ஸிகுளோரைட் மருந்து 750 கிராம் அல்லது டைதயோகார்பமேட் வகை மருந்து 600 கிராம் வீதம் 300 லிட்டர் தண்ணீரில் கலந்து தழைப்பகுதி மற்றும் காய்கள் நன்கு நனையுமாறுத் தெளிக்க வேண்டும்.
கட்டுரை ஆசிரியர்கள்
கு.விக்னேஷ், முனைவர் பட்டப்படிப்பு மாணவர் – தாவர நோயியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தொடர்பு எண்: 82488 33079,
மின்னஞ்சல்
lakshmikumar5472@gmail.com, இரா. அருண்குமார், முனைவர், பட்டப்படிப்பு மாணவர் – வேளாண் விரிவாக்கத் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், தொடர்பு எண்: 73052 81993, மின்னஞ்சல் : arunkumarr698@gmail.com, முனைவர் த.சுதின் ராஜ், உதவிப் பேராசிரியர், தாவர நோயியல் துறை, தொடர்பு எண்: 94420 29913, மின்னஞ்சல் : suthinagri@gmail.com, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் – 608 002.
மேலும் படிக்க....
இறந்த கோழிகளால் பறவை கரைசல் உரம் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி?
PM-kisan தயாராகிறது புதிய பட்டியல் இவர்களுக்கு ஒரு பைசா கூட கிடையாது!!
பயிர் காப்பீடு செலுத்த அவகாசம் ஜூலையில் முடிவு உடனடியாக அடங்கல் வழங்க உத்தரவு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...