விவசாயிகளுக்கு புதிதாக மின் மோட்டார் பம்ப் பொருத்த ரூ.10,000 மானியம்!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர், தாராபுரம், உடுமலை பகுதிகளை விவசாயிகளுக்கு புதிதாக மின் மோட்டார் பம்ப் பொருத்தவும், பழைய மின் மோட்டர்களை மாற்றவும் மானியம் வழங்கப்படுகிறது.
புதிதாக மின் மோட்டார் பம்ப் பொருத்தவும், பழைய மின் மோட்டர்களை மாற்றவும் விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பயனடையுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த திட்டத்தில் ரூ.10,000
இந்த திட்டத்தில், 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டும் பயன் பெறமுடியும். திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதியதாக பொருத்தவும் அதிகபட்சமாக ரூ.10,000 மானியமாக வழங்கப்படுகிறது.
மானியம் பெறுவது எப்படி?
சிறு, குறு விவசாய சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள வரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம், வங்கி புத்கத்தின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட பகுதி விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) ஜெயக்குமாரை 94432 43495 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவசாயிகள் திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
தகவல் வெளியீடு
வினீத், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
மேலும் படிக்க....
நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.12,500 உற்பத்தி மானியம் அறிவிப்பு!!
பயிர் காப்பீட்டுக்கு இணையத்தில் பதிவு செய்யாவிட்டால் இழப்பீடு கிடைக்காது!!
PM Kisan 2019-க்கு பிறகு புதியதாக நில உரிமை பெற்றவர்களுக்கு 5 ஆண்டுகளில் நிதி உதவி வழங்கப்படும்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...