Random Posts

Header Ads

3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களுக்கு 3 % வட்டி மானியம்!!


3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களுக்கு 3 % வட்டி மானியம்!!


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அனைத்து நிதி நிறுவனங்களிலும் வாங்கப்பட்ட குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.



விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு தங்கள் கடன் சுமையில் சிறிய பங்கு குறைந்துள்ளது. எனவே விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


குறுகிய கால வேளாண் கடன்


இதன்படி,பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக பெறப்பட்ட 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் கிடைக்கும்.


விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3% வட்டி மானியம்


இதேபோல், கிசான் கிரெடிட் கார்டு வாயிலாக விவசாயிகளுக்கு தொடர்ந்து 3% வட்டி மானியம் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்க 2022-23 முதல் 2024-25 வரை உள்ள நிதியாண்டில் ரூ.34,856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



வட்டி மானிய அதிகரிப்பு, வேளாண் துறையில் தொடர்ந்து கடன் வழங்குவதை உறுதி செய்யும் என்பதோடு, கடன் வழங்கும் நிறுவனங்களின் குறிப்பாக மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் நிதிநிலையையும் சாத்தியத் தன்மையையும், உறுதி செய்யும். 


குறுகிய கால வேளாண் கடன் என்பது கால்நடை பராமரிப்பு, பால்வளம், கோழி வளர்ப்பு, மீன்வளம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் கிடைக்கும் என்பதால், வேலைவாய்ப்பு உருவாகவும் வழிவகுக்கும். உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 4% வட்டி விகிதத்தில் குறுகிய கால கடன் வழங்குவது தொடரும்.



ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி 5.4%


ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. கடந்த மே மாதம் முதல் தற்போதைய ஆகஸ்ட் மாதம் வரை ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4%இல் இருந்து 5.40% ஆக உயர்த்தியுள்ளது. எனவே, சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது.


இதைக் கருத்தில் கொண்டு, 3 லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.


 மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


Pm Kisan eKYC பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு! ஆன்லைனில் eKYC முடிப்பது எப்படி?


தமிழக பகுதிகளின் அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!!


விவசாயிகளுக்கு புதிதாக மின் மோட்டார் பம்ப் பொருத்த ரூ.10,000 மானியம்!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments