Random Posts

Header Ads

வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!



வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!


விவசாயிகள் கோரிக்கை


கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி மூலம் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுவதுடன், சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. மே மாத இறுதியில் ஏரி நீர் மட்டம் குறைந்ததால், சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



குறுவை மற்றும் சம்பா பாசனத்திற்கு தண்ணீர்


ஆண்டுதோறும் ஜூன் 12ல் மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு மே 24ல் மேட்டூரில் இருந்து குறுவை மற்றும் சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முன் கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் கீழணைக்கு ஜூன் 2ல் தண்ணீர் வந்தது. 


கீழணையில் தண்ணீர் தேக்கும் பணி துவங்கிய நிலையில், சென்னைக்கு குடிநீர் அனுப்ப வேண்டும் என்பதால், 3ம் தேதி முதல் வடவாறு வழியாக 250 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது.


465 மில்லியன் கன அடி தண்ணீர்


தொடர்ந்து அதிக தண்ணீர் வரத்தால், ஜூன் 18 முதல் நீரில் அளவு உயர்த்தப்பட்டு 2 ஆயிரம் கன அடி வரை வீராணத்திற்கு அனுப்பப்பட்டது. இதனால் வீராணம் ஏரி படிப்படியாக நிரம்பியது. சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி காலை வீராணம் ஏரி முழு கொள்ளவாக ஆயிரத்து 465 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி, கடல் போல் காட்சியளித்தது.




தொடர்ந்து 25வது நாட்களாக வீராணம் ஏரி முழு கொள்ளவில் இருந்து வருகிறது.தற்போது ஏரியில் இருந்து வி.என்.ஸ்., மதகு வழியாக 210 கனஅடி, சென்னைக்கு 64 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வீராணம் ஏரி 25 நாட்களாக தொடர்து முழு கொள்ளவில் இருந்தும், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. 


முதல்வர் மற்றும் கலெக்டருக்கு  மனு


சம்பா பட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் உடனடியாக ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் சங்க தலைவர் வேல்ராமலிங்கம், முதல்வர் மற்றும் கலெக்டருக்கு அனுப்பிய மனுவில், உடனடியாக வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். 


வெள்ளாற்றில் தண்ணீர் திறந்து பழைய முரட்டு வாய்க்கால், அரியகோஷ்டி வாய்க்கால், மானம்பார்த்தான் வாய்க்கால், உடையர் வாய்க்கால், வர்த்தராயன்தெத்து வாய்க்கால், தலைகுளம் வாய்க்கால், கரைமேடு வாய்க்கால், பின்னலுார் வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விவசாயிகளை காக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.




மேலும் படிக்க....


நெல், வாழை, முருங்கை உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்கள் சேதம்! இழப்பீடு கேட்டு, அரசிடம் கோரிக்கை!!


இனி இவர்களுக்கு 100 Unit இலவச மின்சார திட்டம் தொடரும் அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!


3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களுக்கு 3 % வட்டி மானியம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments