அங்கக வேளாண்மையில் திறன் மேம்பாட்டு பயிற்சி! ஒரு மாத கால இலவச பயிற்சி!!
தஞ்சாவூர்
அங்கக வேளாண்மையில் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் உழவர் பயிற்சி நிலையம் தஞ்சாவூர் சாக்கோட்டை கிராம இளைஞர்களுக்கு மகளிருக்கு அங்கக வேளாண்மை பற்றிய பயிற்சி நடத்தப்பட உள்ளது. பயிற்சியானது கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் சாக்கோட்டையில் ஒரு மாத காலம் நடைபெற உள்ளது.
பயிற்சி தலைப்பு அங்கக வேளாண்மை ஆகும். அதிக பின்விளைவு கொண்ட இரசாயன வேளாண் முறையினை தவிர்த்து இயற்கை ஆரோக்கியத்தை பாதுகாக்கக் கூடிய அங்கக வேளாண்மையை பின்பற்றுதல் வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மகத்தான சேவை ஆகும். தேவை இல்லாமல் உரமிடுவது இரசாயன பூச்சிக்கொல்லி இடுவது இதன் மூலம் தவிர்க்கப்படும்.
ஆகவே அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க வேளாண்மை- உழவர் நலத்துறை மற்றும் திறன்மேம்பாட்டுக்கழகம் இணைந்து தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலக பயிற்சி அரங்கில் அங்கக வேளாண்மை குறித்து ஒரு மாத கால இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் தங்களது 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார், வங்கி புத்தக நகல், குறைந்த பட்ச கல்வித்தகுதியான 10ம் வகுப்பு தேர்ச்சிக்கான கல்வி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் ஆக., 25 க்குள் திரு. கண்ணன் வேளாண் அலுவலர் உழவர் பயிற்சி நிலையம், இருப்பு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், காட்டுத்தோட்டம் தஞ்சாவூர் செல்பேசி எண் 9095581534 அவர்களிடம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இல்லையெனில் அந்தந்த வட்டார வேளாண் உதவி அலுவலகங்களில் பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்று தொழில் முனைவோராக தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி கொள்ளலாம், என வேளாண் இணை இயக்குநர் திரு. ஐஸ்டின்தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
அங்கக வேளாண்மையில் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் பதிவு செய்து கொள்ளலாம். வளர்ந்து வரும் மக்கள் எண்ணிக்கை காரணமாக வேளாண் உற்பத்தியை நிலைப்படுத்துதல் மட்டுமல்லாமல், அதனை சீரான நிலையில் உயர்த்துதலும் தற்போதைய தேவையாகவுள்ளது.
அதிக ரசாயன இடு பொருட்கள் மூலம் வேளாண்மையில் பசுமைப்புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் தன்னிறைவு அடைந்திருக்கிறோம் என்பதை விஞ்ஞானிகள் உணர்த்துகின்றனர்.
அதிக பின் விளைவு கொண்ட ரசாயன வேளாண் முறையினை தவிர்த்து இயற்கை ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடிய அங்கக வேளாண்மையை பின்பற்றுதல் வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மகத்தான சேவை, ஆகவே அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க வேளாண்மை- உழவர் நலத்துறை மற்றும் திறன்மேம்பாட்டுக்கழகம் இணைந்து சிவகங்கை வேளாண் இணை இயக்குநர் அலுவலக பயிற்சி அரங்கில் அங்கக வேளாண்மை குறித்து ஒரு மாத கால இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் தங்களது 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார், வங்கி புத்தக நகல், குறைந்த பட்ச கல்வித்தகுதியான 10ம் வகுப்பு தேர்ச்சிக்கான கல்வி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் ஆக., 25 க்குள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்று தொழில் முனைவோராக தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி கொள்ளலாம், என வேளாண் இணை இயக்குநர் தனபாலன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள் நுண்ணூட்டங்கள் 50% மானிய விலையில் விநியோகம்!!
விவசாயிகளுக்கு நடவு முதல் அறுவடை வரை மொத்தம் 3 லட்சத்து 75 ஆயிரத்து 500 மானியம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...