Random Posts

Header Ads

PMFBY பாதிக்கப்படும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற காப்பீடு செய்யுங்கள் வேளாண்துறை அழைப்பு!!



PMFBY பாதிக்கப்படும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற காப்பீடு செய்யுங்கள் வேளாண்துறை அழைப்பு!!


இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்படும் தென்னை உள்ளிட்ட விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு, வேளாண்துறை அழைப்பு விடுத்து உள்ளார்கள் சுல்தான்பேட்டை இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்படும் தென்னை உள்ளிட்ட விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு, வேளாண்துறை அழைப்பு விடுத்து உள்ளார்கள். 



காப்பீடு செய்ய அழைப்பு இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், வறட்சி, இடி, மின்னல் மற்றும் கன மழையினால் பாதிக்கப்படும் தென்னை, பனை மரம் மற்றும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற அனைத்து விவசாயிகளும் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம். 


இதுகுறித்து சுல்தான்பேட்டை வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தென்னை, பனைமர காப்பீட்டு திட்டத்தின் கீழ் குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களை 4-ம் ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7-ம் ஆண்டு முதல் 60 ஆண்டு வரையிலும் காப்பீடு செய்யலாம். 



ஹெக்டருக்கு 175 தென்னைக்கு காப்பீடு


ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய நல்ல ஆரோக்கியமான மரங்களை காப்பீடு செய்யலாம். ஒரு ஹெக்டருக்கு 175 தென்னை மரங்களை மட்டுமே காப்பீடு செய்ய முடியும். 4 முதல் 15 வயதுள்ள மரங்களுக்கு ரூ.2.25 -ம், 16 வயது முதல் 60 வயது வரை உள்ள மரங்களுக்கு ரூ.3.50-ம் தவணை தொகையாக செலுத்த வேண்டும். 


ஒரு மரத்திற்கு ரூ.1,750 இழப்பீடு


முன்மொழிவு படிவம் தவணை தொகைக்கான வரைவோலையை(DD) அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் -சென்னை என்ற பெயரில் எடுக்க வேண்டும். 4 வயது முதல் 15 வயது வரை உள்ள மரங்களுக்கு காப்பீட்டு தொகையாக மரம் ஒன்றுக்கு ரூ.900, 16 வயது முதல் 60 வயது வரை உள்ள மரங்களுக்கு தலா ரூ.1,750 வழங்கப்படும். 



விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


  • ஆதார் அட்டை நகல், 


  • சிட்டா மற்றும் அடங்கல், 


  • புல எண் வரைபடம், 


  • விவசாயிகளின் புகைப்படம்  


  • சுய அறிவிப்பு கடிதம், 


  • வட்டார வேளாண்மை உதவி இயக்குனரின் காப்பீட்டு திட்டத்திற்கான சான்றிதழ், 


  • வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், 


  • காப்பீட்டுக் கட்டணத்துக்கான வரைவோலை 



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


காப்பீடு செய்வதற்கு முன்மொழிவு படிவம் மற்றும் மேற்கண்ட இந்த ஆவணங்களை அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பல்வேறு விவசாய பயிர்களுக்கும் விவசாயிகள் காப்பீடு செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.



மேலும் படிக்க....


சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள் நுண்ணூட்டங்கள் 50% மானிய விலையில் விநியோகம்!!


விவசாயிகளுக்கு நடவு முதல் அறுவடை வரை மொத்தம் 3 லட்சத்து 75 ஆயிரத்து 500 மானியம்!!


யூரியா உரத்தேவையை குறைப்பதற்கான உன்னதமான தொழில்நுட்பங்கள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments