ஊரக வளர்ச்சி துறையுடன் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்த சிறப்பு மேலாண்மை கூட்டம்!!
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 13 பஞ்சாயத்துகளுக்கு ஊரக வளர்ச்சி துறையுடன் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்த அறிக்கை தயாரிக்க சிறப்பு மேலாண்மை கூட்டம் நடைபெற்றது.
மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மதுக்கூர் வடக்கு, சிராங்குடி, மோகூர், விக்ரமம், வாட்டாகுடி, மூத்தா குறிச்சி, புளியக்குடி, காரப்பங்காடு, மதுர பாஷனிபுரம், அத்திவெட்டி மற்றும் கல்யாண ஓடை பஞ்சாயத்துகளில் இவ்வருடம் ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து கிராம வளர்ச்சிக்கும் விவசாயிகள் தன்னிறைவு அடைவதற்கும் தேர்வு செய்யப்படவுள்ள திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி தேவை குறித்து சிறப்பு மேலாண்மை கூட்டம் மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன் ராஜு மற்றும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர்களின் கலந்துரையாடலுடன் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,
- சிறிய தடுப்பணைகள்
- சிறிய மழைநீர் சேகரிப்பு அமைப்புகள்
- நீர் அமிழ்வு குட்டைகள்
- மண் வரப்புகள் அமைத்தல்
- சி மற்றும் டி வாய்க்கால் தூர்வாரும் பணிகள்
- சமூக நாற்றங்கள் அமைத்தல்
- சாலையோரத்தில் மரங்கள் நடுதல்
- பரந்த அளவு மரக்கன்றுகள் நடுதல்
- தொகுப்பு நிலங்களுக்கு கப்பி சாலை அமைத்தல்
- விவசாயிகளுக்கு வேளாண் பொருட்களை எடுத்துச் செல்ல வண்டி பாதை அமைத்தல்
- தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் திறன் மேம்பாட்டு பொருளாதார மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குதல்
- ஊரக வளர்ச்சித் துறையில் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் வேளாண் பணிக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தல்
- தொகுப்பு நிலத்தின் வரப்புகளில் பலன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்தல்
- தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் தானியக்கிடங்கு அமைத்தல்
போன்றவைகள் எந்தெந்த பஞ்சாயத்துகளுக்கு தேவை என்பது குறித்த கலந்துரையாடி தேவைகள் பதிவு செய்யப்பட்டது.
வேளாண் உதவி அலுவலர்கள் சுரேஷ் தினேஷ் முருகேஷ் பூமிநாதன் ஜெரால்டு மற்றும் கார்த்திக் ஆகியோர் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அட்மாதித்த அலுவலர்கள் ராஜூ ஐயாமணி மேலாண்மை கூட்ட உறுப்பினர்களை பதிவு செய்தனர்.
பஞ்சாயத்து செயலாளர்கள் அறிக்கை தயார் செய்து வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களிடம் வழங்கினர்.
காலத்தை வழங்கப்படும் பணிகளுக்கு மட்டுமே நிதி மதிப்பீடு செய்து அரசாணை பெற முடியும் என்பதால் சிறப்பு மேலாண்மை கூட்டம் இன்றைய தினம் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
தென்னையில் கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு 100% பின்னேற்ப்பு மானியத்தில் தேனி பெட்டிகள்!!
பண்ணை குட்டை வெட்டி உள்ள விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு செய்திட 18,000 ரூபாய் மானியம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...