நெல் அறுவடைக்குப் பின் வாத்துகளின் வரத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்!! செலவு இன்றி சாகுபடி!!
வாத்துகளின் வரத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்தில் முன் பட்ட குருவை அறுவடை முடிந்துள்ள வயல்களில் விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் பகுதிகளை சேர்ந்த வாத்து வளர்ப்பவர்கள் 30 நாள் வாத்து குஞ்சுகளுடன் வாத்து வளர்க்க அனுமதிக்கும் விவசாயிகளின் வயலில் முகாமிட்டுள்ளனர்.
நெல் அறுவடைக்குப் பின் நெல் வயலில் மெசின் அறுவடை முடிந்த வைக்கோல் ஆங்காங்கே திட்டு திட்டாக இருக்கிறது இத்துடன் நீரையும் நேரடியாக வயலில் பாய்ச்சும் போது வைக்கோல் அழுக துவங்குகிறது.
இந்த நேரத்தில் வாத்து வளர்ப்பவர்கள் 3000 வாத்து குஞ்சுகளுடன் 30 நாள் வயதுடைய வைகளை நெல் வயலில் விடுகின்றனர் வாத்து காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மேய்க்கப்படுகிறது. 30 நாள் வாத்து குஞ்சுகள் உரிய தீவனம் அளிக்கப்பட்டு தேவையான தடுப்பூசிகள் இடப்பட்டு வளர்ப்பதற்காக மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் வயல்களுக்கு கொண்டுவரப்படுகிறது.
20 லிருந்து 30 நாள் வரை வாத்துக்கள் வயலில் மேய்க்க விடப்படுகிறது. வாத்துக்கள் கொட்டிலில் அடைக்கப்படும் வரை தொடர்ச்சியாக நீருக்குள்ளும் சேற்றிலும் வாயை விட்டு தொடர்ந்து கொத்திக் கொண்டே இருக்கின்றன. இதன் மூலம் நெல் வயலில் உள்ள களை விதைகள் உண்ணுவதோடு இளம் களைசெடிகளையும் கொத்தி தின்றுவிடும்.
மேலும் சேற்றில் இருக்கும் புழுக்களையும் தவளை மற்றும் சிறு சங்கு பூச்சிகளையும் இவை பிடித்து உண்ணுகின்றன. இதனால் வாத்து மேய்க்கப்படும் வயல்களில் பூச்சிகளின் தொல்லை மற்றும் களைகளின் தொல்லை இருக்காது அதனால் களைமற்றும் பூச்சி கட்டுப்பாடு செலவினமும் விவசாயிக்கு குறைகிறது.
இது மட்டும் இன்றி வாத்துகள் தொடர்ச்சியாக 8 மணி நேரம் ஒரே இடத்தில் மேய்ந்து கொண்டிருப்பதால் அவை இடும் எச்சமும் மண்ணில் சேர்ந்து மண்ணின் கரிமச்சத்தினை அதிகரிக்கிறது பயிருக்கு ஒரு நல்ல சத்தாக இயற்கை உரமாக அமைகிறது. இயற்கை சாகுபடிக்கு முதல் படியாகவும் அமைகிறது.
வயலில் கிடைக்கும் வைக்கோல்களையும் தொடர்ச்சியாக மிதித்து விடுவதால் மண்ணின் காற்றோட்டமும் அதிகரித்து வைக்கோல் விரைவில் மக்கி விடுகிறது. வாத்துகளை முட்டாள் என்று சொல்லுவார்கள் ஆனால் வாத்துகள் விவசாயிகளின் அடிப்படை பணியாட்களை போல சிறந்த பணிகளை செய்கின்றன.
ஆடு மாடுகள் கிடை போடுவதற்கு விவசாயிகள் பணம் வழங்க வேண்டும் ஆனால் வாத்து கிடை போடுவதற்கு விவசாயிகள் பணம் ஏதும் வழங்கத் தேவையில்லை. வாத்து வளர்ப்பவர்கள் வயலில் மேய்ப்பதன் மூலம் இயற்கையான முறையில் மூன்று மாதத்தில் தங்களுடைய வாத்துக்களை செயற்கை தீவனம் இன்றி இயற்கையாக வளர்த்துக் கொள்கின்றனர்.
வயலின் தன்மைக்கேற்ப வாத்து வளர்ப்பவர்கள் வாத்துக்களை தேவைப்படும் விவசாயி வயல்களுக்கு வண்டிகள் மூலம் மாற்றிச் செல்லும் செலவு மட்டுமே. 3000 வாத்து குஞ்சுகளுக்கு தீவனம் மற்றும் மருந்து போக்குவரத்து செலவினம் உட்பட 2 லட்சம் வரை செலவாகிறது வளர்ந்த வாத்துகளை ரூபாய் 250 முதல் 300 வரை விற்பனை செய்து விடுவார்.
இது வாத்து வளர்ப்பவருக்கான லாபம். விவசாயிக்கு செலவில்லாத பூச்சி மருந்து இல்லாத ரசாயனமற்ற களை கட்டுப்பாடு பூச்சி கட்டுப்பாடு மற்றும் இயற்கை உரம் செலவின்றி கிடைக்கிறது.இதுவே லாபம்.
எனவே விவசாயிகள் தற்சார்பு முறையில் செலவு இன்றி சாகுபடி செய்ய வாத்துகளின் வரத்தும் விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்தார்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
பண்ணை குட்டை வெட்டி உள்ள விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு செய்திட 18,000 ரூபாய் மானியம்!!
துல்லியமான பயிர் விளைச்சல் கணக்கீடு நாட்டின் உணவுதானிய உற்பத்தி மற்றும் தேவை பற்றிய பயிற்சி!!
தென்னையில் கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு 100% பின்னேற்ப்பு மானியத்தில் தேனி பெட்டிகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...