Random Posts

Header Ads

அரசு அறிவித்த ஹேப்பி நியூஸ் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் ஆட்சியர் அறிவிப்பு!!



அரசு அறிவித்த ஹேப்பி நியூஸ் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் ஆட்சியர் அறிவிப்பு!!


தேனி மாவட்ட விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டறவு சங்கங்களில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என ஆட்சியர் முரளீதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-



தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்கடன், வட்டியில்லா கால்நடை பாராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுய உதவிக்குழுக்கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் விவசாயிகள் தங்களின் ஆவணங்களான


  • ஆதார் அட்டை நகல்


  • குடும்ப அட்டை நகல்


  • நில உடைமை தொடர்பான 10(1) கணினி சிட்டா


  • பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று


  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 



ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு உறுப்பினர் படிவத்தோடு, பங்குத் தொகையாக ரூ.100 மற்றும் நுழைவுக்கட்டணம் ரூ.10 செலுத்தி புதிய உறுப்பினராக சேர்ந்துக்கொள்ளலாம்.


மேலும், உரிய கடன் மனு சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயன்பெறலாம். சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்று கொள்ளலாம்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


கூடுதல் விபரங்களுக்கு துணைப்பதிவாளர் பெரியகுளம் 73387 22003 மற்றும் துணைப்பதிவாளர் உத்தமபாளையம் 73387 22002 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் குறுகிய கால வேளாண் கடன் மத்திய அரசு அறிவிப்பு!!


PM கிசான்திட்டத்தில் 8 மாற்றங்கள் பணத்தை திருப்பி கொடுக்க விவசாயிகளுக்கு எச்சரிக்கை!!


விவசாய கடன்களுக்கு 3% வட்டி தள்ளுபடி அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தகவல்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments