PM கிசான் கவுரவ நிதி திட்ட பயனாளிகள் நில ஆவணங்களை இணைக்க வேண்டுகோள்!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கவுரவ நிதி (பி.எம். கிசான்) திட்ட பயனாளிகள் தங்களது நில ஆவணங்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காண்பித்து இணைத்துக் கொள்ளுமாறு செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் எல்.சுரேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
விவசாய குடும்பத்திற்கு இடுபொருட்கள்
இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு விவசாய குடும்பத்திற்கு 2000 வீதம் ஆண்டுக்கு 6000 ரூபாய் என மூன்று தவணைகளாக வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு அவர்கள் திட்டத்தில் சேர்ந்த தேதியினை பொறுத்து 11 தவணை தொகைகள் வரை வழங்கப்பட்டுள்ளது. தற்போது 12 வது தவணை தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நில ஆவணங்களை இணைக்க வேண்டும்
திட்டப் பயனாளிகளின் நில ஆவணங்களை தமிழக அரசின் தமிழ் நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. பிரதமரின் கவுரவ நிதி பெரும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய நில ஆவணங்களை அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காண்பித்து பதிவேற்றம் செய்து கொண்டால் மட்டுமே அடுத்த தவணை உதவித்தொகை விடுவிக்கப்படும்.
ஆதார் எண்ணை இணைத்திட வேண்டும்
தகுதியான விவசாயிகள் அனைவரும் நில ஆவணங்களை சரி செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் ஆதார் அடைப்படியிலான நிதி விடுவிப்பு நடப்பதால் தகுதியான விவசாயிகள் தங்கள் வங்கிக்கு சென்று வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திட வேண்டும். பொது சேவை மையத்தை அணுகி பி.எம். கிசான் (PM Kisan) வலைதளத்தில் இ.கே.ஒய்.சி (e-KYC) பதிவு செய்திட வேண்டும்.
மேலும் படிக்க....
விவசாய கடன்களுக்கு 3% வட்டி தள்ளுபடி அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தகவல்!!
பயிர்களுக்கு அறுவடை இயந்திரம் வாடகைக்கு இணையத்தில் விண்ணப்பிப்பது எப்படி?
PMFBY பாதிக்கப்படும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற காப்பீடு செய்யுங்கள் வேளாண்துறை அழைப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...