Random Posts

Header Ads

நெல் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஊக்கத்தொகை வழங்க தமிழக முதல்வர் உத்தரவு!!



நெல் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஊக்கத்தொகை வழங்க தமிழக முதல்வர் உத்தரவு!!


நடப்பு காரீப் பருவத்தில் நெல் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகையை செப்டம்பர் 1 முதல் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கடந்த 2021-22 காரீப் கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 



இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2022-23 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.


இந்த ஆண்டில் வழக்கத்திற்கு முன்பாகவே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதாலும், விவசாயிகளுக்குத் தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டுள்ளதாலும் விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரீப் 2022-23 பருவத்திற்கான நெல் கொள்முதலை செப்டம்பர் 1 முதல் மேற்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிடைக் கேட்டுக் கொண்டார்.


அதன்படி, மத்திய அரசு தமிழ்நாட்டில் காரீப் 2022-23 பருவத்திற்கான நெல் கொள்முதலை செப்டம்பர் 1 முதல் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. 2022-23 காரீப் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2040 என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2060 என்றும் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.



இந்நிலையில், நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75, சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 என கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


அதன்படி தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2115 என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. 


இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகையினை செப்டம்பர் 1 முதல் வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.



மேலும் படிக்க....


PM கிசான் கவுரவ நிதி திட்ட பயனாளிகள் நில ஆவணங்களை இணைக்க வேண்டுகோள்!!


அரசு அறிவித்த ஹேப்பி நியூஸ் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் ஆட்சியர் அறிவிப்பு!!


விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் குறுகிய கால வேளாண் கடன் மத்திய அரசு அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments