Random Posts

Header Ads

PMFME இப்படி ஒரு சூப்பர் தொழிலா! அரசே மானியம் கொடுக்குது!!



PMFME இப்படி ஒரு சூப்பர் தொழிலா! அரசே மானியம் கொடுக்குது!!


உணவுப் பதப்படுத்துதல் ஆலை தொழில் தொடங்க அரசு வழங்கும் மானியம்.இந்தியாவில் உணவுப் பதப்படுத்துதல் துறை (Food Processing) தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. 


நாடு முழுவதும் தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி, மாசாலாப் பொருட்கள் என பலவகையான உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்கான மார்க்கெட் இந்தியாவில் வளர்ந்துள்ளது.



இத்தனை வாய்ப்புகள் இருக்கும்போதிலும், புதிதாக தொழில் முனைவோர் உணவுப் பதப்படுத்துதல் துறையில் பெரிதாக களம் இறங்குவதில்லை. எனவே, உணவுப் பதப்படுத்துதல் துறையில் புதிய தொழில்களை ஊக்குவிக்க PMFME (Pradan Manthiri Formalisation of Micro food processing Enterprises) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


உணவுப் பதப்படுத்துதல் துறையில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு PMFME திட்டத்தின் கீழ் கடன் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்று உணவுப் பதப்படுத்துதல் ஆலைகளை அமைக்கலாம்.



18 வயதை தாண்டிய அனைவருமே PMFME திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். உணவுப் பதப்படுத்துதல் சார்ந்த புதிய ஆலைகளை அமைப்பதற்கு மட்டுமல்லாமல் ஏற்கெனவே இருக்கும் ஆலைகளை மேம்படுத்துவதற்கும் PMFME கீழ் உதவி பெறலாம்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


இத்திட்டத்தின் கீழ், தொழிலுக்கான மூலதனத்தில் 35% மானியமாக பெறலாம். அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம். PMFME திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் www.pmfme.mofpi.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.



மேலும் படிக்க....


PM கிசான் கவுரவ நிதி திட்ட பயனாளிகள் நில ஆவணங்களை இணைக்க வேண்டுகோள்!!


அரசு அறிவித்த ஹேப்பி நியூஸ் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் ஆட்சியர் அறிவிப்பு!!


அங்கக வேளாண்மையில் திறன் மேம்பாட்டு பயிற்சி! ஒரு மாத கால இலவச பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments