விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க எச்சரிக்கை!!
தஞ்சையில் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர். விநாயகமூர்த்தி அவர்கள், தஞ்சாவூர் விதை ஆய்வாளர் மணிமாறன் உடன் ஆய்வு மேற்க்கொண்டார்கள்.
மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில், நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில் விவசாயிகள் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். விதைப்புக்கு தேவையான வரப்பெற்ற நெல் விதைகள் அனைத்து அரசு வேளாண்மை விரிவாக்க நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று (04.08.22) தஞ்சாவூர் மற்றும் மாரியம்மன் கோவில் பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
விதை சட்டப்படி விதைகள் விற்பனை செய்ய வழங்கப்பட்ட விதை உரிமங்கள், சம்பா பருவ விதைகள் இருப்பு, கொள்முதல் செய்யப்பட்ட விதைகளின் இன்வாய்ஸ், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் என ஆய்வு மேற்கொண்டனர்.
விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் விதை விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
விவசாயிகளுக்கு ரசீது கட்டாயம்
இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள் விதை விற்றதற்கான ரசீது, விவசாயிகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும். ரசீது இல்லாமல் விற்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ விதைச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
தொடர்ந்து, சம்பா பருவத்தில் நல்ல முளைப்பு திறன் உள்ள தரமான நீண்ட கால வயதுடைய விதைகள் ஆன சி.ஆர்.1009, சி.ஆர்.1009 சப் 1, ஏடிடீ 51 போன்றவற்றை விதை ஆய்வாளர்கள் விதை மாதிரிகள் எடுத்து விதை ஆய்வு நிலையத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், விதை விற்பனையாளர்கள், நெல் விதைகளின் முளைப்பு திறனை கட்டாயம் உறுதி செய்த பின்னர் மட்டுமே விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்ய வேண்டும் என தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தகவல் வெளியீடு
- Dr.M.நவீன் சேவியர், M.Sc.Agri:Ph.D
பட்டுக்கோட்டை விதை ஆய்வாளர்.
மேலும் படிக்க....
ஊரக வளர்ச்சி துறையுடன் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்த சிறப்பு மேலாண்மை கூட்டம்!!
குழித்தட்டு நாற்றுகள் ஒரு கன்று ஒரு ரூபாய்க்கு விற்பனை தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!!
விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியம் ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...