Random Posts

Header Ads

வெண்டை பயிரை தாக்கும் பூச்சிகளை கையாள்வது எப்படி? கூடுதல் மகசூல் பெறுவது எப்படி?



வெண்டை பயிரை தாக்கும் பூச்சிகளை கையாள்வது எப்படி? கூடுதல் மகசூல் பெறுவது எப்படி?


வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து காளையார்கோவில், வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.என்.செந்தில்நாதன், விரிவான முறையில் எடுத்துக் கூறினார்.


காய் துளைப்பான்


வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகமாக காணப்படும். இவற்றை கட்டுபடுத்த கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த முறைகளை மேற்கொள்ள வேண்டும்.



  • பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்துவிட வேண்டும்.


  • முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும்.


  • நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும் அல்லது எண்டோசல்பான் 1.5 மில்லி அல்லது மோனோகுரோட்டாகாஸ் 2 மில்லி இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும்.


  • வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.


சாம்பல் நிறவண்டு


இதனைகட்டுபடுத்த கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்து எக்டருக்கு 12 கிலோ இட வேண்டும்.


நூற்புழு தாக்குதலை தடுக்க


எக்டருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும் போது உரத்துடன் கலந்து இட வேண்டும் அல்லது ஒரு எக்டருக்கு கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்து எக்டருக்கு 2 கிலோ அல்லது போரேட் 10 ஜி குருணை மருந்து எக்டருக்கு 2 கிலோ இட வேண்டும்.



அசுவினிப்பூச்சி


இதனை கட்டுபடுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி அல்லது டெமெத்தோயேட் 2 மில்லி மருந்து இவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.


நோய்கள்


மஞ்சள் நரம்பு தேமல் நோய் : இது மிகவும் அதிகளவில் வெண்டையைதாக்க கூடிய ஒரு நச்சுயிரிநோய் ஆகும். இந்நோய் வெள்ளை ஈ என்ற புழுக்களால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது. 


இப்பூச்சியை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு 2 மில்லி வேம்பு எண்ணை மற்றும் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.


இதற்கு 2 மில்லி வேம்பு எண்ணை மற்றும் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். கோடை காலத்தில் இந்நோய் மிக அதிகளவில் வெண்டையை தாக்கும். 



இந்த பருவத்தில் நோயை எதிர்த்து வளரக் கூடிய பார்பானிகிராந்தி போன்ற இரகங்களை பயிரிடுவது நல்லது. மேலும் இந்நோயை தாங்கி வளரக்கூடிய இரகங்களான பார்பானி கிராந்தி அர்கா அனாமிகா மற்றும் அர்கா அபஹாப் போன்றவற்றை சாகுபடி செய்ய வேண்டும்.


சாம்பல் நோய் 


இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு 15 நாட்கள் இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்கவேண்டும். பிறகு இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.


அறுவடை & மகசூல்


நட்ட 45 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்றவதற்க்கு முன் அறுவடை செய்து விட வேண்டும். 1 முதல் 2 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்வது முக்கியமாகும். எக்டருக்கு 90 முதல் 100 நாட்களில் 12-15 டன் காய்கள் கிடைக்கும்.



மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் மானியம் விண்ணப்பிக்க தோட்டக்கலைத்துறை அழைப்பு!!


வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.10,500 மானியங்கள் பெற அழைப்பு!!


நெல் அறுவடைக்குப் பின் வாத்துகளின் வரத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்!! செலவு இன்றி சாகுபடி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments