Random Posts

Header Ads

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் மற்றும் கேழ்வரகில் குலைநோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகள்!!



உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் மற்றும் கேழ்வரகில் குலைநோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகள்!!


உளுந்து மஞ்சள் தேமல் நோய்


சிவகங்கை மாவட்டத்தில் சித்திரை பட்டத்தில் சாகுபடி செய்த உளுந்து பயிரில் சில இடங்களில் மஞ்சள் தேமல் நோய் காணப்படுகிறது.


அறிகுறிகள்


இளம் இலைகளில் மஞ்சள் நிறபுள்ளிகள் ஆரம்பத்தில் தோன்றும். புதிதாகதோன்றும் இலைகளில் மஞ்சள் மற்றும் பச்சைதிட்டுக்கள் காணப்படும்.


புள்ளிகளின் அளவுஅதிகமாகி முடிவில் இலைமுழுவதும் மஞ்சளாக மாறிவிடும்.



பயிர் வளர்ச்சி குறைந்து பூக்கள் மிகமிக குறைவாக இருக்கும். காய் எண்ணிக்கை குறைந்து மகசூல் பெரிதும் பாதிக்கப்படும்.


மேலாண்மை முறைகள்


கோடைபட்டத்தில் நோய் எதிர்ப்புசக்தியுள்ள உம்பன்-8, உம்பன்-10 ரகங்களைசாகுபடிசெய்யவேண்டும்.


மஞ்சள் தேமல் பாதித்த பயிர்களைஆரம்பத்திலேயே பறித்து அழிக்க வேண்டும்.


வரப்புபயிராக சோளம் 7 வரிசையில் விதைக்கவும். இமிடோகுளோபிரிட் 5 மிலிஃகிலோஎன்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்


என சிவகங்கை,விதைச் சான்றுமற்றும் அங்ககச்சான்றுஉதவி இயக்குநர் மதுரைசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.



கேழ்வரகில் குலைநோய் கட்டுப்பாடு


சிவகங்கை மாவட்டத்தில் கேழ்வரகு பயிரில் சில இடங்களில் குலைநோய் தாக்குதல் காணப்படுகிறது. நாற்றங்காலால் முதல் கதிர் முற்றம் வரை இதன் தாக்குதல் தென்படும்.


அறிகுறிகள்


சிறிய பழுப்பு நிற வட்ட புள்ளிகள் தோன்றி இலை முழுவதும் பரவி இலை முற்றிலும் காய்ந்துவிடும். இலையில் கண் வடிவபுள்ளிகள் காணப்படும். 


கதிர் பருவத்தில் கதிர் சுருங்கி கருப்பு நிறமாக மாறும். இதனால் கதிர் பதராக மாறிவிடும். பெருமளவு மகசூல் இழப்ப ஏற்படும்.


கட்டுப்படுத்தும் முறைகள்


சூடோமோனாஸ் விதை நேர்த்தி செய்து நோயற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும். முறையா பயிர் 30 +10 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.



சூடோமோனாஸ்ஒருலிட்டருக்கு 2 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். 15 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.


நாற்றாங்காலில் விதைத்த 10 நாளில் கார்பன்டை தெளிக்க வேண்டும். மீண்டும் 20-25 நாள், 40-45 நாளில் தெளிக்க வேண்டும்.


மேற்கண்ட வழி முறைகளை கடைபிடித்து கேழ்வரகில் குலை நோயை கட்டுப்படுத்தலாம் என சிவகங்கை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மதுரைசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.



மேலும் படிக்க....


தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் ரூ.27.50 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு! விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!


ராபி பருவத்திற்கு விவசாயிகள் இந்த வங்கியில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்!!


விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க எச்சரிக்கை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments