சம்பா நெல் பயிர் காப்பீடு! பயிர் காப்பீடு செய்ய ரூ.2339 கோடி வேளாண்துறை அறிவிப்பு!!
சம்பா பருவ நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான பணிகளை, வேளாண் துறையினர் துவங்கியுள்ளனர்.பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த நடப்பாண்டில், 2,339 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது, பயிர் சாகுபடிக்கு உகந்த சூழல் நிலவி வருகிறது. இதை பயன்படுத்தி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டது.
ஆனால், குறித்த காலத்தில் காப்பீட்டு நிறுவனங்களை மாநில அரசு தேர்வு செய்யாததால், குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்ய முடியவில்லை. இந்நிலையில், மாநிலம் முழுதும் சம்பா பருவ நெல் சாகுபடி முன்கூட்டியே துவங்கிஉள்ளது.
இப்பருவத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து, 35 லட்சம் ஏக்கர் வரை நெல் சாகுபடி நடப்பதற்கு வாய்ப்புள்ளது. இதையடுத்து, பயிர் காப்பீடு செய்யும் பணி, விரைவில் துவங்க உள்ளது.
இதற்காக, இந்திய வேளாண் காப்பீட்டு கழகம், இப்கோ டோக்கியோ, எச்.டி.எப்.சி., எர்கோ, பஜாஜ் அலையன்ஸ், ரிலையன்ஸ் ஆகிய ஐந்து பயிர் காப்பீட்டு நிறுவனங்களை, வேளாண் துறை நியமித்துள்ளது.வங்கி கடன் பெற்ற விவசாயிகள், கட்டாயத்தின் அடிப்படையில் முன்பு காப்பீடு செய்தனர்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
தற்போது, விருப்பத்தின் அடிப்படையில் காப்பீடு செய்தால் போதும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை காலத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி நடப்பதால், அதிகளவில் விவசாயிகளை பயிர் காப்பீடு செய்ய வைப்பதற்கு, வேளாண் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க....
நிலமற்ற விவசாயிகள் விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் தமிழக அரசு அறிவிப்பு!!
ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் பயன்பெற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்!!
தென்னை மரங்களுக்கு வட்ட பாத்தி, இலவச வரப்புகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...