நிலமற்ற விவசாயிகள் விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் தமிழக அரசு அறிவிப்பு!!



நிலமற்ற விவசாயிகள் விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் தமிழக அரசு அறிவிப்பு!!


நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் நிலம் வாங்க விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் தமிழக அரசு


விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய  தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. 



நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.


ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் 200 நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்க ரூ.10,00,00,000/- (ரூபாய் பத்து கோடி மட்டும்) மாநில அரசு நிதியிலிருந்து நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை (நிலை) எண்.79, ஆதி(ம) பந (சிஉதி) துறை, நாள்.10.09.2022-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.



மத்திய அரசு திட்டத்தில், நிலமில்லாத ஆதிதிராவிட விவசாயத் தொழிலாளர், 1 ஏக்கர் முதல் 3 ஏக்கர் வரை, விவசாய நிலம் வாங்க, 10 லட்சம் ரூபாய் அளவுக்கு மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


அதன்படி, குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும், நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்கள், 200 பேருக்கு மானியம் வழங்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கும்படி, தாட்கோ மேலாண்மை இயக்குனர், அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.அதை பரிசீலனை செய்த அரசு, 10 கோடி ரூபாயை ஒதுக்கி, அரசாணை வெளியிட்டு உள்ளது.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


இத்திட்டத்தின் கீழ் நிலம் வாங்கும் விவசாயிகள், தங்கள் நிலங்களை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது. மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு, பயனாளிகளை தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க....


தென்னை மரங்களுக்கு வட்ட பாத்தி, இலவச வரப்புகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!!


டிரோன் மூலம் மருந்து தெளிக்க 50 சதவீதம் மானியம் வேளாண்மை துறை அறிவிப்பு!!


காளான் உற்பத்தி கூடங்கள் அமைக்க 40 சதவீத மானியத்தில் ரூ. 1 லட்சம் மானியம் தோட்டக்கலை துறை அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments