டிரோன் மூலம் மருந்து தெளிக்க 50 சதவீதம் மானியம் வேளாண்மை துறை அறிவிப்பு!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு டிரோன் மூலம் பூச்சி மருந்துகள் தெளிக்க மானியம் வழங்கப்படுவதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, நவீன காலத்திற்கு ஏற்றார் போல், விவசாயம் மாறி வருகின்றது. மேலும், விவசாய பணிகளுக்கு ஆட்கள் குறைவாக கிடைத்து வருகின்றனர். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு வகையான யுக்திகளை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.
மேலும், டிரோன்களை இயக்க பல்வேறு பயிற்சியும் வோளண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் அளிக்கப்படுகிறது. சில சமயங்களில் டிரோன்கள் வேளாண்மை பயன்பாட்டிற்காக வாங்கும் போது, மானியமும் அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வேளாண்மை அலுவலர்கள் டிரோன் மூலம் மருந்து மற்றும் உரம் தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்படுகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பருத்தி காய் காய்த்து அறுவைடைக்கு தயாராகும் நிலையில் மாவு பூச்சி, இலைபேன் தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஆள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பூச்சி மருந்து தெளிக்க செலவு அதிகமாகிறது. டிரோன் மூலம் பருத்தி பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.500 அல்லது 50 சதவீதம் மானியம் இதில் எது குறைவோ அது வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் நீடித்த நிலையான பருத்தி இயக்கத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் நவீன வேளாண்மை சாகுபடிக்கு உரம், மருந்து, பூச்சிக்கொல்லிகளுக்கும், களை எடுக்கவும் டிரோன்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்நிலையில் நவீன கால வேளண்மையிலும் டிரோன் முக்கிய அங்கம் பிடித்துள்ளது.
விவசாயத்தில் டிரோன்கள் முக்கிய இடத்தையும் பிடிக்கும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. வரும் காலத்தில் ஆட்கள் பற்றாக்குறையை போக்க டிரோன் தான் முக்கிய காரணியாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதன் மூலம் தேவையற்ற கூடுதல் செலவுகள், நேர விரயம் தவிர்க்கப்படுகிறது. குறிப்பாக பூச்சி மருந்து செலவும் குறைவாகிறது. எனவே பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
நிலப்போர்வை அமைக்க முன்வரும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6400 மானியம் தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!!
ஊடுபயிர் சாகுபடி செய்ய இடுபொருட்கள், நாற்றுக்ககளுக்கு ரூ.12000 மானியம் தோட்டக்கலைத் துறை அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...