ஊடுபயிர் சாகுபடி செய்ய இடுபொருட்கள், நாற்றுக்ககளுக்கு ரூ.12000 மானியம் தோட்டக்கலைத் துறை அறிவிப்பு!!
தேனி மாவட்டத்தில் கோகோ சாகுபடி பரப்பை அதிகரிக்க தென்னையில் ஊடு பயிராக 70 எக்டேருக்கு ரூ.8.40 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்வதால் அதிக லாபம் பெறலாம். சாக்லேட் தயாரிப்பிற்கு கோகோ அதிகம் பயன்படுகிறது. இதனால் தென்னையில் ஊடுபயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் தோட்டக்கலைத்துறை திட்டமிட்டது.
ஒரு முறை பயிரிட்டால் 18 ஆண்டுகள் பயன்பெறலாம். நட்பாண்டில் 70 எக்டேருக்கு ரூ.8.40 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. ஒரு எக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
அதில் ரூ.5 ஆயிரத்திற்கு நாற்றுக்கள், ரூ.4,800க்கு இடுபொருட்கள், மீதியுள்ள ரூ.2200 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். நடப்பாண்டில் விவசாயிகள் தேர்வு நிறைவு பெற்றுள்ளன. அடுத்த திட்டத்திற்கான பதிவு துவங்கும் என மாவட்ட தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.
ஊடு பயிருக்கு ரூ.10,500 மானியம் தோட்டக்கலைத் துறை அறிவிப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், தோட்டக்கலை துறையின் சார்பில், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னைக்கு இடையில் ஊடுபயிராக வாழை பயிர் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு மானியமும், இடுபொருட்களும் வழங்கப்படுகிறது. இதை எவ்வாறு பெறலாம் என்று பார்க்கலாம்.
தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள், அபிவிருத்தி திட்டங்கள் வழங்கப்படுகிறது. மேலும் வேளாண் கருவிகளும், உரங்களும், இடு பொருட்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஏற்கனவே உள்ள ஒரு சாகுபடிக்குள் மற்றொரு பயிர் சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு இரட்டை லாபம் கிடைக்கும். இந்த திட்டத்தில் பல்வேறு பலன்கள் கிடைக்கிறது.
அப்படி இருக்ககையில் விவசாயிகள் பலன் பெரும் வகையில் மேலும், மானியத்தையும் இடு பொருட்களையும் வழங்குவதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருச்சியை அடுத்துள்ள மணப்பாறையில், தோட்டக்கலை துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னைக்கு இடையில் ஊடுபயிராக வாழை பயிர் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,500 மதிப்பில் மானியமும், இடுபொருட்களும் வழங்கப்பட உள்ளது.
விருப்பம் உள்ள விவசாயிகள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு திட்டப் பயன்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும், இதை எவ்வாறு பெற வேண்டும் என்றால் உடனடியாக மணப்பாறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தும் பயன்பெறலாம் என மணப்பாறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
40% அரசு மானியத்தில் சோலார் மின்வேலி விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!
100% மானியத்தில் கருவிகளை பெற ரூ.14.64 கோடி நிதி ஒதுக்கீடு உடனே விண்ணப்பியுங்கள்!!
கூட்டுறவு சங்கங்களில் 5% வட்டியில் ரூ.25,000 வரை கடன் வழங்க அரசு உத்தரவு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...