100% மானியத்தில் கருவிகளை பெற ரூ.14.64 கோடி நிதி ஒதுக்கீடு உடனே விண்ணப்பியுங்கள்!!
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.14.64 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ஆ.கீதா, அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
1566 ஹெக்டேர் நிதி இலக்கு
பெரம்பலூர் மாவட்டத்தில், 2022-2023ம் ஆண்டில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், கரும்பு, பருத்தி, மக்கச்சோளம், நிலக்கடலை, பயறு வகைகள் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 1566 ஹெக்டேர் பரப்பளவில், சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க, நிதி இலக்கு, 14.64 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.
100 சதவீத மானியத்தில் கருவிகள்
வேளாண் பயிர்களான மக்காச்சோளம், துவரை, தென்னை, பருத்தி, கம்பு பயிர்களுக்கு சொட்டுநீர் பாசன கருவிகள், நிலக்கடலை, பயறு வகைகளுக்கு தெளிப்பு நீர் கருவிகள் மற்றும் மழைத் தூவான் கருவிகளை 100 சதவீத மானியத்தில் சிறு குறு விவசாயிகள் பெறலாம்.
குறைந்த அளவு மழை பொழிவு மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைவால், கிணறுகளில் இருக்கும் குறைந்த நீரை கொண்டு, நுண்ணீர் பாசனம் மூலம், பயிரின் வேர் பகுதிக்கு மட்டும் நேரடியாக நீரை செலுத்துவதன் மூலம், 30-40 சதவீத நீரை மிச்சப்படுத்தலாம்.
அதோடு, நீரில் கரையும் உரங்கள் மூலம், 20 சதவீத மகசூல் கூடுதலாக பெறலாம். மேலும் களைகள் கட்டுப்பாடு மற்றும் குறைந்த நீர் பாசன செலவு ஆகியவற்றால் நுண்ணீர் பாசனம் மூலமாக விவசாயிகள் உற்பத்தி செலவினையும் குறைக்கலாம்.
இத்திட்டத்தில், 100 சதவீத மானியத்தில் சிறு, குறு விவசாயிகளும், பெரிய விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் பயன் பெறலாம். இந்த திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் தங்களின்
- ஆதார் அட்டை
- சிறு - குறு விவசாயி சான்று
- அடங்கல்
- நில வரைபடம்
- ரேஷன் அட்டை
- கணினி சிட்டா
ஆகிய ஆவணங்களுடன், வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களை அணுகலாம் அல்லது www.tnhorticulture.tn.gov.in என்ற இணைய தளத்திலும் நேரடியாக பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பதிவு செய்ய இந்த காணொளியை காணுங்கள்
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
கூட்டுறவு சங்கங்களில் 5% வட்டியில் ரூ.25,000 வரை கடன் வழங்க அரசு உத்தரவு!!
ஒரு ஏக்கருக்கு ரூ.8000 வீதம் விவசாயிகள் 5 ஏக்கருக்கு விண்ணப்பிக்கலாம்! தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!!
ஒரு ஹெக்டேர்க்கு ரூ.13,400 விவசாயிகள் தாமாகவே முன்வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...