Random Posts

Header Ads

ஒரு ஏக்கருக்கு ரூ.8000 வீதம் விவசாயிகள் 5 ஏக்கருக்கு விண்ணப்பிக்கலாம்! தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!!



ஒரு ஏக்கருக்கு ரூ.8000 வீதம் விவசாயிகள் 5 ஏக்கருக்கு விண்ணப்பிக்கலாம்! தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!!


கோவை மாவட்டத்தில் காய்கறி விவசாயத்தைப் பெருக்கும் நோக்கிலும், விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கிலும், மானியத்தை அள்ளி வீசியுள்ளது தோட்டக்கலைத்துறை. இதனால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகளும் அதிகமாகியுள்ளது.


தோட்டக்கலைத் துறை சிறப்பு திட்டம்


தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் M. புவனேஸ்வரி தோட்டக்கலைத் துறை சார்பில் விசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்து அறிவித்துள்ளார். தமிழகத்தில் மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் உழவா் சந்தைகளில் காய்கறிகள் வரத்தை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.



வீரிய ஒட்டு ரக நடவுப்பொருள்கள்


தோட்டக்கலைத்துறை மூலமாக தரமான வீரிய ஒட்டு ரக நடவுப்பொருள்கள் மற்றும் விதைகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்து மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது. உற்பத்தியை இருமடங்காக்கி, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்குவது தமிழகத்தின் பிரதான கொள்கையாகும்.


ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்


அதன்படி கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 8 உழவா் சந்தைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான இடுபொருள்கள் மானியமாக வழங்கப்படுகிறது.




இத்திட்டத்தில் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு உழவா் சந்தையில் காய்கறி விற்பனை செய்வதற்கான அடையாள அட்டை வழங்கப்படும். 




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS 


இணையதளத்தில் பதிவு


இத்திட்டம் உள்ளிட்ட தோட்டக்கலைத் துறையின் அனைத்துத் திட்டங்களிலும் பயன்பெறுவதற்கு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க....


30% பணம் செலுத்தினால் போதும் சோலார் பம்பு செட்!! விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கும் அரசு!!


ஒரு ஹெக்டேர்க்கு ரூ.13,400 விவசாயிகள் தாமாகவே முன்வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்!!


பயிர் காப்பீடு 2023 - 24 ஆம் ஆண்டிலிருந்து புதிய மாற்றங்கள் மத்திய அரசு அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.



Post a Comment

0 Comments